ஆரோக்கியம்

அடிக்கடி தலைக்கு குளிக்கலாமா?

அடிக்ககடி தலைக்குளிப்பது நல்லதா ? கெட்டதா என்பது தெரியாமலே பல பெண்கள் தலைக்கு குளிப்பதுண்டு. இன்னும் சில பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பது உண்டு. இன்னும் சில  பெண்கள் மாதம் ஒரு முறை மட்டுமே தலைக்கு குளிப்பார்கள். அவர்களுக்கு இப்படி குளிக்கலாமா ? என்பவர்களுக்கும், அடிக்கடி தலைக்கு குளிக்கும் பெண்களுக்கும் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் முக்கியமானது.

அதிகம் முடியை அலசுவதால். அது உங்கள் முடியை அதிகம் உதிரச்செய்யும். ஏனென்றால் ஈரமான முடியின் வேர்க்கால்கள் மிகவும் பலவீனமாக இருப்பதால் உதிர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அடிக்கடி முடி அலசுவது உங்கள் முடியின் எண்ணெய் பசையைக் குறைத்து அதனை வறட்சியாக்கும். உங்கள் தலைமுடிக்கு ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்க எண்ணெய்ப்பசை அவசியம்.

எண்ணெய் பசை குறைந்தால் முடியின் நுனிகளில் பிளவு ஏற்படும். பிளவு முடி அதன் வளர்ச்சியை குறைக்கும். எனவே தினமும் தலையை அலசுவதை தவிருங்கள். முடியை அடிக்கடி அலசுவதால் சரும வறட்சி ஏற்பட்டு பொடுகு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இது அதிக அளவிலான முடி உதிர்விற்கு வகுக்கும். மேலும், பொடுகின் உதிர்ச்சியால் முக பரு போன்ற சரும பிரச்சனைகளும் ஏற்படும்.

அதிகம் தலையை அலசுவதால் சரும ஈரப்பதம் குறைந்து தலை, அரிப்பை ஏற்படுத்தும். மேலும் நாம் உபயோகிக்கும் ஷாம்பூவில் உள்ள இரசாயனங்கள் உங்களது தலையின் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அதிக அளவிலான முடிஉதிர்விற்கு வழிவகுக்கும். அதிகம் முடியை அலசுவதால் முடி இழுவை ஏற்படலாம் அல்லது பலவீனமடையலாம். இதனால் முடியின் நடுப்பகுதியில் உடைந்து விட வாய்ப்புண்டு. இதை தவிர்க்கவும் நீங்கள் தினமும் தலைக்கு குளிப்பதை தவிருங்கள்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

12 − 4 =

Related Articles

Close