ஆரோக்கியம்மருத்துவம்

அதிக நெய் ஆபத்தா ?

நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும், கரையக்கூடிய கொழுப்புகள். ஆகவே தான் இது உடல் எடையை அதிகரிக்காது என்று சொல்கின்றனர் நிபுணர்கள். சொல்லப்போனால், நெய்யில் செறிவூட்டப்பெற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளதால், இது உடலில் வைட்டமின்களை உறிஞ்சிக் கொள்கிறது.

தொடர்ச்சியாக நெய்யை உடலில் சேர்த்து வந்தால், உடல் மற்றும் மனம் உறுதியடையும், மற்றும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இதை சாப்பிட்டால், உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். அதிலும் பார்வை, தசைகள் போன்றவை ஆரோக்கியமாக இருக்கும். கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு, நெய் ஒரு சிறந்த வழி. ஏனெனில் அவர்கள் வெண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயமின்றி சாப்பிடலாம். வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைந்துவிடும்.

இதய நோய் மற்றும் அதிக எடை இல்லாமல் இருப்பவர்கள், சுத்தமான நெய்யை சாப்பிடலாம். ஒரு நாளைக்கு ஒருவர் 10-15 கிராம் நெய் தான், உடலில் சேர்க்க வேண்டும்.  முகத்தில் ஏற்படும் கருவலையம், உதட்டுக் கருமை, வறண்ட சருமம் மற்றும் தலைமுடிப் பிரச்னை ஆகியவற்றுக்கும் சிறந்த அழகுப் பராமரிப்புப் பொருளாகவும் பயன்படுகிறது.ஆயுர்வேத மருத்துவத்தில் மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகளுடன் நெய்யும் பயன்படுத்துகிறார்கள். நெய் மூலிகையில் இருக்கும் மருத்துவ சக்தியை உள்ளிழுத்து அந்தந்த பாகங்களுக்கு சீராக அனுப்புகிறது.

Show More

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

1 + 11 =

Close