ஆன்மீகம்இந்து

அலங்காநல்லூர் பங்குனி பெருந்திருவிழா

வீரத்தின் விளை நிலமாம் அலங்கா நல்லூரின் எல்லை காவலன் அருள்மிகு முனியாண்டி சுவாமி வகையறா திருக்கோவிலுடன் இணைந்த அருள்மிகு முத்தாலம்மன், அருள்மிகு அய்யனார், கருப்பண சுவாமி திருக்கோவில்களின் பங்குனி பெருந்திருவிழா கடந்த மாதம் சிறப்பாக நடைபெற்றது.

நூறு ஆண்டுகளுக்கும் பழமையான இக்கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவின் முதல் நாளில் அம்மனின் முக அழகை ரசிக்க காத்திருக்கும் மக்களுக்காக தேக்குமர சப்பரத்தில் ஒய்யாரமாய் அமர்ந்து முளைப்பாரிகளின் அணிவகுப்பு பின்தொடர பவனி வரும் ஸ்ரீ முத்தாலம்மன் சுவாமியின் நகர்வலம். (2 ஆண்டுக்கு ஒரு முறைதான் இந்த அம்மனின் முகத்தினை காண முடியும். மற்ற நேரங்களில் வெற்று பீடத்தில் மட்டுமே பூஜை நடைபெறும்.) அதனை தொடர்ந்து நேர்த்திக்கடனாக மா விளக்கு பூஜை வரவேற்பு நிகழ்ந்தது.


சப்பரம் பராமரிப்பாளர்களுக்கு மரியாதை செய்தல்

இரண்டாம் நாள் சுற்றுவட்டார மக்களின் ஆர்ப்பரிப்பு அதிகரிக்கும் முனியாண்டியின் பவனி. பறை, ஜண்டை மேளம், தாரை தப்பட்டை முழங்க சிலம்பாட்டம், புலியாட்டம், பொய்க்கால் ஆட்டம் என வழி நெடுகெங்கிலும் தொடர வாண வேடிக்கைகளுடன் குதிரை வாகனத்தில் பிரம்மாண்ட தோற்றத்தில் ஸ்ரீமுனியாண்டி சுவாமியின் நகர்வலம் நடைபெற்றது.


முத்தாலம்மன்

அதனை தொடர்ந்து நள்ளிரவில் ஸ்ரீமுத்தாலம்மன் பூப்பல்லக்கில் பவனி வந்து அம்மன் பூஞ்சோலை அடைந்தாள் (2 ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யப்படும் முத்தாலம்மன் சிலை பண்டிகை முடிந்ததும் ஆற்றில் கரைக்கப்படும். இதனையே பூஞ்சோலை என்கின்றனர் இக்கிராமத்தினர்). மூன்றாம் நாள் முனியாண்டிக்கே உரித்தான கிடா வெட்டுதல் நடைபெற்றது.


ஐய்யனார் சுவாமி

இரவு ஸ்ரீ அய்யனார் கருப்பணசாமி குதிரை எடுப்புடன் நகர்வலம் வந்து மந்தை வந்தடைய பின்னிரவு ஸ்ரீ முத்தாலம்மன் நாடகம் நடைபெற்றது. அதன்பின் ஐந்தாம் நாள் ஸ்ரீ அய்யனார் கருப்பண சாமியை கும்பிட்டு வடம் முடுக்கி எருது கட்டு பிரம்மாண்டமாக நிகழ்ந்தது.


வடம் முடுக்கி சாமி கும்பிடுதல்

மேலும் திருவிழாவில், சமர் கலைக்குழு நண்பர்களின் கிராமிய நிகழ்ச்சி, அபிநயாவின் நடன நாட்டிய நிகழ்ச்சி மற்றும் சன் டிவி புகழ் அசத்தல் மன்னர்களின் பல்சுவை நிகழ்ச்சி என தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் திறமைகளுக்கு கைகொடுக்கும் வகையில் அலங்காநல்லூர் பங்குனி பெருந் திருவிழா இனிதே நிறைவுற்றது. நடைபெற்ற இந்த திருவிழாவில் ஊர் முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

எழுத்து / நிழற்படம்: சி.அரவிந்தன்

வெளியீடு: ஹலோ மதுரை மாத இதழ்
ஆண்டு: 01.05.2017

Reporter Ramesh

15 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைதுறையில் பணிபுரிந்து வருகின்றேன். சிறப்புக் கட்டுரைகள், சிறப்புச் செய்திகள் எழுத்து வடிவிலும், காணொலியாகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு. பத்திரிக்கைத்துறையில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகின்றேன். அந்த மாபெரும் கடலில் ஒரு இலையாகவே மிதந்து தொடர்ந்து மாணவனாக கற்று வருகின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலிக்கு நிருபராகவும், புகைப்படக்கலைஞராகவும் பணியாற்றுகின்றேன். அலைபேசி எண்: 9566531237.

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat