பியூட்டிபெண்கள்

அழகிய கண்களுக்கான குறிப்புகள்

கண்களில் அதிக அழுத்தமோ, எரிச்சலோ உணர்ந்தால், உடனே நன்கு தண்ணீர் ஊற்றி கண்களை கழுவுங்கள். பின் 5 நிமிடம் கண்களுக்கு ஓய்வளியுங்கள். இது, கண்களுக்கு ஏற்ப அழுத்தத்தை குறைக்க உதவும். அதிகாலை நடைப்பயிற்சி, அதிகாலை சூரிய ஒளி மிகவும் நல்லது, புத்துணர்ச்சி அளிக்க கூடியது. இது கண்களை அழுத்தமின்றி, இலகுவாக உணர உதவும்.

கண்ணுக்கு அதிகம் வேலை கொடுக்கும் சமயங்களில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும், இடையில், ஐந்து நிமிடம், உள்ளங்கையால், இரு கண்ணையும் மூடியபடி அமர்ந்து, கண்ணுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
வெயிலில் அதிக நேரம் நின்றிருந்த பிறகு, உடனே கண்களைக் கழுவக் கூடாது. நீங்கள் நிற்கும் இடத்தின் வெப்ப நிலைக்கேற்ப, உடல் ஆசுவாசப்பட்ட பிறகே, கண்ணையும், முகத்தையும், தண்ணீரால் கழுவலாம்.

தூரத்தில் இருக்கும் பொருட்களைப் பார்க்கும் பொருட்டு, அதிக நேரம் அதை உற்றுப் பார்க்காதீர்கள். கண்களுக்குத் தேவை யான அளவு, கண் சிமிட்டுவது அவசியம். குடல் சுத்தமாக இருந்தால், கண் பார்வையும் தெளிவாக இருக்கும். படபடப்பு, மன உளைச்சல், சோகம், கோபம், கவலை ஆகி யவை, கண்ணையும் பதம் பார்க்கக் கூடியவை. எனவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றை, உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், கண் பார்வை, தெளிவாக இருக்கும். இரு உள்ளங்கைகளைக் கொண்டு இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய்த பிறகு, கண்களுக்கு ஓய்வளியுங்கள். வெளிச்சம் குறைவான இடங்களில் இவ்வாறு பயிற்சி செய்தல் நல்லது.

kamali

ஹலோ மதுரை மாத இதழின் வடிவமைப்பாளராக செயல்படுகின்றேன். அத்துடன் பெண்களுக்கான அழகு குறிப்புகள் முதல் மருத்துவம் வரையிலாக தகவல்கள் மற்றும் கட்டுரைகள் எழுதுவது எனது பொழுதுபோக்கு. மேலும், சமையல் குறித்த எழுத்துகளும், காணொளிகளும் படைப்பாக செய்து வருகின்றேன். இது தவிர மதுரை குறித்த வரலாற்று தகவல்கள் மற்றும் ஆன்மீகம் குறித்தும் எழுதி வருகின்றேன்.

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat