ஜூவல்லரிபெண்கள்

அழகிய வங்கி வாங்கப் போறீங்களா ?

முதலில் உலோகத்தை தேர்வு செய்யுங்கள். தங்கம், செம்பு, பித்தளை மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களால் ஆன வங்கிகள் (Vanki) எளிதாக கிடைக்கும். எனினும், ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒவ்வொரு குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சங்கள் உள்ளன. நீங்கள் வங்கிக்காக ஒதுக்கி உள்ள செலவு பட்டியலை கவனியுங்கள்.

தங்கம் மற்றும் வைரம் போன்ற விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட வங்கிகள், அதிக விலை உயர்ந்ததாக இருக்கும். எனினும், பித்தளை, மற்றும் செம்பு போன்ற உலோகத்தால் ஆன வங்கிகள் சற்று குறைவான விலைகளில் கிடைக்கும். அதனால், உங்கள் செலவு செய்யும் திறனுக்கு ஏற்றவாறு தேர்வு செய்வது நல்லது.

வங்கியின் வடிவமைப்பு. நீங்கள் தேர்வு செய்யும் வங்கி மிகவும் ஆடம்பர வடிவத்தில் இருக்க வேண்டுமா, அல்லது எளிமையாக இருக்க வேண்டுமா என்பதை தீர்மானம் செய்யுங்கள், உங்கள் பட்டு புடவைக்கு ஏற்றவாறு வங்கியை எளிமையாகவோ, ஆடம்பரமாகவோ தேர்வு செய்வது நல்லது. முத்து மற்றும் பிற பாசி மணிகளால் செய்யப்பட்ட வங்கிகளும் கிடைகின்றன.

முழுவதும் முத்துக்களால் செய்யப்பட்ட வங்கிகள் சற்று விலை உயர்ந்ததாக இருக்கும். எனினும், ஒரு நாள் தேவைக்காக நீங்கள் வாங்க எண்ணினால், அதனோடு விலை குறைவாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் பாசி மணிகளால் செய்யப்பட்ட வங்கிகளை தேர்வு செய்யலாம்

வங்கியின் நிறம். இது உங்கள் திருமண புடவைக்கு ஏற்றவாறு இருப்பது மேலும் அழகை அதிகரிக்கும். வங்கிகள், வெள்ளை, பச்சை, சிவப்பு மற்றும் தங்கம் போன்ற நிறங்களில், அவற்றை உருவாக்க பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு ஏற்றவாறு கிடைக்கும். இதனால் நீங்கள் எளிதாக உங்கள் பட்டு புடவைக்கு ஏற்றவாறு ஒரு நிறத்தை தேர்வு செய்யலாம். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அணியும் வங்கி உங்கள் அழகை அதிகரிக்கும் வகையிலும், உங்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

Tags
Show More

kamali

ஹலோ மதுரை மாத இதழின் வடிவமைப்பாளராக செயல்படுகின்றேன். அத்துடன் பெண்களுக்கான அழகு குறிப்புகள் முதல் மருத்துவம் வரையிலாக தகவல்கள் மற்றும் கட்டுரைகள் எழுதுவது எனது பொழுதுபோக்கு. மேலும், சமையல் குறித்த எழுத்துகளும், காணொளிகளும் படைப்பாக செய்து வருகின்றேன். இது தவிர மதுரை குறித்த வரலாற்று தகவல்கள் மற்றும் ஆன்மீகம் குறித்தும் எழுதி வருகின்றேன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

2 + 5 =

Close