ஜூவல்லரிபெண்கள்

அஷ்டலட்சுமி ஒட்டியாணம்

அஷ்டலட்சுமி ஒட்டியாணங்கள் என்பவை ஒவ்வொரு லட்சுமி உருவங்கள் இணைந்தவாறு உள்ளன. அதாவது ஆறு இதழ் பூ அமைப்புடன் கூடிய தட்டு பகுதியின் நடுவில் மகாலட்சுமியும் இதன் வலது புறம், இடது புறமாக மற்ற லட்சுமிகளும் வரிசை கிரமமாக ஒரே அளவில் இணைக்கப்படும். இதன் பிறகு தகடு அமைப்பும் இணைத்து கட்டும் கயிறு பகுதியும் உள்ளன. லட்சுமியின் அழகை மேம்படுத்த சிகப்பு, பச்சை கற்கள் ஆங்காங்கே பதியப்பட்டும், கீழ் சிறு மணிகள் தொங்க விடப்பட்டும் உள்ளன. அப்படியே தத்ரூபமான மகாலட்சுமியும், அதனுடன் இணைந்த அஷ்டலட்சுமியும் சிற்ப வேலைப்பாட்டுடன் செதுக்கப்பட்டுள்ளன. இந்த அற்புதமான ஒட்டியானங்கள் திருமண வைபோகம் மற்றும் நீராட்டு விழாவில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

Show More

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

nine − 9 =

Close