ஆடைகள்மென்

ஆண்களுக்கான செ¬ர்வானி

பெண்களைப் போல் ஆண்களும் ஆடை விசயத்தில் அதிக ஆர்வம் காட்டுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதனை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது வட இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் செர்வானி ஆடை தென்னிந்திய ஆண்கள் மத்தியில் விற்பனை களை கட்டத்துவங்கியுள்ளது.

ஆமாம் தற்கால இளைஞர்கள் விரும்பி வாங்கும் பிரிவாக இண்டோ வெஸ்டர்ன் உள்ளது. இதன் மேம்பட்ட நவீன வடிவமைப்பு என்பது மாறுபட்ட வண்ண சேர்க்கை, வண்ண சாயல் போன்றவை கூடுதல் பொலிவை தருகின்றன. தொடை பகுதி வரை நீண்ட இந்த செ­ர்வானி கைப்பகுதி, காலர் போன்றவை வண்ணத்துடனும், நடுப்பகுதி பிரகாசமான வண்ணத்துடன் காட்சி அமைப்புடன் பெரும்பாலும் காணப்படும். சில மாடல்கள் ஒற்றை வண்ண சாயலுடன் காட்சி தருகின்றது. இதன் மேற்புற அழகை மேம்படுத்த மணிகள், கற்கள் மற்றும் ராஜகம்பீர பட்டன்கள் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.

இதேபோல் அனார்கலி செ­ர்வானி விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த செ­ர்வானி ஆடை மார்பு பகுதியில் கச்சிதமான இறுக பற்றும் அமைப்புடன் இருக்க கீழ் இறங்க இறங்க அகலமான அமைப்புடன் உள்ளவாறு உருவாக்கப்பட்டுள்ளது. சில மாடல்கள் குடை மாதிரி விரிந்த அமைப்புடனும், சில க்ஷி வடிவ கட்டிங் கொண்டவாறும், சில கனமாக கோட் அமைப்புடன் உட்புற சுருள் வடிவ துணியமைப்புடன் திறம்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. ராயல் லுக் தரும் வகையில் அனார்கலி செர்வானியின் மேற்பகுதியில் திரட் வேலைப்பாடு மற்றும் மணிகள், கற்கள் பதித்த வேலைப்பாடும் செய்யப்பட்டிருக்கும். அதுபோல் செ­ர்வானி ஆடைகளுக்கு ஏற்ற ஷால் மற்றும் ஜீட்டிஸ் ஷி போன்றவை கம்பீர அமைப்புடன் இணைப்பாக கிடைக்கின்றது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

seven − 1 =

Related Articles

Close