கார்வாகனம்

ஆன்லைனில் கார் வாங்கலாம்; நிஸான் புதிய வசதி

கொரோனா ஏற்படுத்தியுள்ள பிரச்னையால் சமூக இடைவெளியும், வெளி இடங்களில் செல்வதில் பாதுகாப்பு பிரச்னையும் எழுந்துள்ளது. மேலும், தேசிய ஊரடங்கு அமலில் உள்ளதால், மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

இதனை மனதில் வைத்து நிஸான் கார் நிறுவனமும் ஆன்லைன் மூலமாக கார் வாங்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இது சாதாரண மொபைல் ஆப் மூலமாக புக்கிங் செய்து வாங்குவது போல அல்லாமல், கார்களை 360 டிகிரி கோணத்தில் பார்த்து, வாங்கும் வகையில்  ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கார்களை பார்த்து  தேர்வு செய்த பின்னர், அங்கேயே முன்பதிவு செய்யவும், பணத்தை ஆன்லைன் மூலமாகவே கட்டுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது. அதேபோன்று, முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் காரை வீட்டிலேயே டெலிவிரி பெற முடியும்.

ஆன்லைன் மூலமாகவே நிஸான் கார்களுக்கு அந்நிறுவனத்தின் சொந்த பைனான்ஸ் நிறுவனம் மூலமாக கார் கடன் செய்து தரும் வசதியும் ஆன்லைன் மூலமாகவே செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில், ஷோரூமிற்கு செல்வதற்கான அவசியம் தவிர்க்கப்படுகிறது.

அண்மையில்தான் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தவிர்த்து, அதிசெயல்திறன் மிக்க 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், நிஸான் கனெக்ட் என்ற மொபைல் அப்ளிகேஷன் மூலமாக பல்வேறு தகவல்களை பெறுவதற்கும், காரின் எஞ்சின், கதவுகளை ரிமோட் முறையில் இயக்குவதற்கான வசதிகளையும் இந்த அப்ளிகேஷன் வழங்கும். நிஸான் கிக்ஸ் கார் ரூ.9.49 லட்சம் முதல் ரூ.1.4.15 லட்சம்.

Car Ganesh

கார், பைக் மீது நான் கொண்ட காதலினால் என் பெயரை கார் கணேஷ் என்று மாற்றிக் கொண்டவன். எவ்வளவு தூரமாக இருந்தாலும் சரி, அது என்ன பைக்காக இருந்தாலும் சரி, பெட்ரோல் இருந்தால் மட்டும் போதும், போய்க் கொண்டே இருப்பேன் சலிக்காது சாலைகளின் மீது.பைக்கே இப்படி என்றால் கார் எல்லாம் சொல்லவே வேண்டாம். டப்பா காராக இருந்தாலும் இந்த ராஜா கைய வச்சா அது ராங்கா போவதில்லை. அந்த பாட்டுத்தான். எல்லாவிதமான பைக்கிலும் சவாரி செய்து ஒரு வலம் வந்திருக்கும் நான் ஒரு சில கார்கள் மட்டும் கனவாகவே உள்ளது. இந்த பக்கத்தில் புதிய கார், பைக், மெக்கானிக், டிப்ஸ் என எல்லாமே உங்களுக்கு அள்ளித் தரப்போகின்றேன். நிறை இருந்தால் பாராட்டுங்கள், குறை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.இப்படிக்கு... உங்கள் கார் கணேஷ்

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat