இயற்கை மருத்துவம்மருத்துவம்
Trending

ஆரோக்கியமானது அக்குப்பஞ்சர் மருத்துவம்

இன்றைக்கு எந்த மருத்துவத்தை நாம் நம்புவது என்று தெரியாமல் குழம்பி நிற்கும் அளவிற்கு மருத்துவத்துறை பணம் பறிக்கும் இயந்திரத் துறையாக மாறிவிட்டது. நோயை விட அதனைக் குணப்படுத்த ஆகும் செலவு ஏழைகளின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. அரசு மருத்துவமனைகளை நோக்கி எல்லோரும் படையயடுத்தால் அதை எங்கணம் சமாளிக்கும் அரசு. நாம் நமது ஆரோக்கியத்தை இழந்திருப்பதற்கு உணவு பழக்கத்தின் விளைவும், மருத்துவ முறையும் முக்கிய காரணம் என்கிறார் அக்குப்பஞ்சர் மருத்துவர் கே.உமாசித்தீஸ்வரி.

பல சிக்கலான நோயாளிகளை மீட்டுள்ள டாக்டர் கே.உமாசித்தீஸ்வரி அக்குப்பஞ்சரில் M.D, நாடி பார்ப்பதில் சிறப்பு பயிற்சி மற்றும் Yoga & Naturopathy – ம் முடித்துள்ளார். இதேபோன்று இவரது கணவர் டாக்டர் ஆர்.செல்வராஜ் அக்குப்பஞ்சர் M.D, என இருபாலருக்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர். மதுரை எஸ்.எஸ்.காலனியில் சுகானந்தம் அக்குப்பஞ்சர் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் கே.உமாசித்தீஸ்வரி அக்குப்பஞ்சர் மருத்துவம் என்பது வலி நிவாரணி அல்ல. நோய்களைக் குணமாக்கும் வழியாகும். என இதுகுறித்து கூறியது இதோ உங்களுக்கும்…

அக்குப்பஞ்சர் என்றால் என்ன?
அக்குப்பஞ்சர் என்பது நமது பாரம்பரிய இந்திய சிகிச்சை முறை. வர்ம சிகிச்சை புள்ளிகள்தான் அக்குப்பஞ்சர் புள்ளிகள். போகர் எனும் இந்திய சித்தர்அரூபமாக சீனாவிற்குச் சென்று அங்கு இக்கலையை கற்றுக் கொடுத்தாக கூறப்படுகிறது. இச்சிகிச்சை சீனாவில் மிகவும் பிரசித்திபெற்றது. கிட்டதட்ட 80 சதவீதம் இந்திய மருத்துவர்கள் அங்கு உள்ளனர். இந்திய மருத்துவம் என்றபோதும் அதன் சிறப்பு இன்றும் இந்தியாவில் தெரியாமல் இருப்பது வருத்தமான விசயம்.

சிகிச்சைமுறை:
முதலில் நாங்கள் நோயாளியின் நாடி பிடித்து பார்த்து உள்ளுறுப்புகளின் இயக்கம் குறித்து அறிவோம். அக்குப்பஞ்சர் என்பது உயிர் ஆற்றல் சிகிச்சை. மற்ற சிகிச்சையில் நோயின் பெயருக்கு மருத்துவம் அளிக்கப்படும். ஆனால் இதில் நோயாளியின் உடலில் உள்ள குறைகள் கண்டறியப்பட்டு அவற்றை மேம்படுத்தும் உடல் ஆராய்ச்சி செய்யப்படும் சிகிச்சை வழங்கப்படும்.

எந்தெந்த நோய்களுக்குச் சிறந்தது:
அக்குப்பஞ்சர் சிகிச்சை அனைத்துவிதமான நோய்களுக்கும் சிறந்தது. பிரச்சனைகளுடன் வரும் நோயாளிகளுக்கு மற்ற சிகிச்சைப் போன்று வலிக்கு மருந்து கொடுக்காது, நோய்க்கான அடிப்படையை ஆராய்ந்து முதல் நிலையை எங்கு தொடங்க வேண்டும் என்பதைக் கண்டறிய ஸ்கேன் ஒன்று உள்ளது. இது உடலில் ஓடும் மின்காந்த அதிவர்வலைகளைக் கணக்கிட்டு 140 விதமான நோய்களை கண்டறியும் தன்மை இந்த ஸ்கேனுக்கு உண்டு. அதேபோன்று இனி வரக்கூடிய நோய் குறித்தும். உடலில் எந்த பகுதி பலவீனமாக உள்ளது என்பது பற்றியும் நமக்குத் தெரிவித்துவிடும். இதனால் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சுலபமாகிவிடும்.

டீ டாக்ஸ்:
அக்குப்பஞ்சர் சிகிச்சையின் இன்னொரு சிறப்பு டீ டாக்ஸ் சிகிச்சை ( கழிவு மண்டல இயக்கம்). இது சிறுநீரக வல்லுநர்களிடம் சென்று டயாலிஸ் செய்ய வேண்டியவற்றை கால் வழியாகவே கழிவுகளை அகற்றிவிடும் எளிய முறையாகும். நமது பாதத்தில் 40,000 துவாரங்கள் உள்ளது. ஒரு பாத்திரத்தில் நீரிட்டு அதில் கார்பன் உள்வாங்கியை இதில் கலந்திடுவோம். இதன் வாயிலாக ஒவ்வொருவ ருக்கும் உடலின் தன்மைக்கு ஏற்ப நீரின் நிறம் வேறுபடும். அதனை வைத்து உள்ளுறுப்புகள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சை அளிப்போம். உதாரணமாக கருப்பு நிறத்தில் வந்தால் சிறுநீரகம் பாதிப்பு, பச்சை நிறம் பித்தப் பை பாதிப்பு, ஆரஞ்ச் நிறமென்றால் மூட்டு பாதிப்பு.

மார்பக புற்று நோய் சிகிச்சை:
இன்றைக்கு பெரும் பாலான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப் பிரச்சனையி லிருந்து விடுபட மார்பகங்களை அறுத்தெடுக் கின்றனர். இது நிரந்தர தீர்வல்ல. நமது உடல் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. ஆதலால் மீண்டும் உருவாக அதிக வாய்ப்புள்ளது. எனவே மார்பக புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை முற்றுப்புள்ளியல்ல.

ஆதலால் உடல் உறுப்புகளின் தொடர்புகளில் ஏற்பட்டுள்ள (பிரச்சனைகளை) தடைகளைக் கண்டறிந்து அவற்றை நீக்கி அதற்கான இணைத்தலை செய்கையில் நோயின் வீரியம் குறைவதோடு, படிப்படியாக நோயிலிருந்து நோயாளி முழுமையாக விடுபடலாம். ஆதலால் பெண்களின் மார்பகப் புற்று நோய்க்கு அக்குப்பஞ்சரை விட சிறந்த மருத்துவம் வேறொன்றுமில்லை.

மருத்துவர் செல்வராஜ்

சிகிச்சையின் பலன்:
எந்த நோயாக இருந்தாலும்அக்குப்பஞ்சர் சிகிச்சையால் முதல் பத்து நாட்களில் நோயாளி 70 சதவீதம் குணம் அடைவார். ஏனெனில் சிகிச்சையுடன் உணவுகள் கொடுக்கின்றோம். இந்த உணவு 90 சதவீதம் நோயை குணப்படுத்திவிடும். அதன் பிறகு நோயின் தன்மையைப் பொறுத்து வாரம் ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை சிகிச்சை கொடுக்கின்றோம்.

பெரும்பாலும் அக்குப்பஞ்சர் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் முற்றிய நிலையில்தான் வருகின்றார்கள். இது எங்களுக்கு மிகப் பெரிய சவாலான விசயமாகும். எந்த ஒரு நோயும் ஆரம்ப நிலையில் இருந்தால் அதனை உடனடியாகச் சரி செய்து விடலாம். இதுவே முற்றி நிலை என்றால் மிக மிகக் கடினம். இதுபோன்று வரும் நோயாளிகளுக்கு மூலிகை மருந்துகள் சிலவற்றைக் அளித்து பலரையும் மீட்டு புது வாழ்வு கொடுத்துள்ளோம்.

முதுமைக்கு ஏற்றதா ?
எந்த வயதாக இருந்தாலும் உயிராற்றல் சரியாக இருந்தால் இச்சிகிச்சை எளியது. எல்லா மருத்துவத்துக்கும் இது பொருந்தும். பொதுவாக 50 வயதைக் கடந்த பெண்களுக்கு ஏற்படும் மூட்டு வலியை அக்குப்பஞ்சர் சிகிச்சையின் வாயிலாக ஒரே வாரத்தில் சரி செய்துவிடலாம். மேலும் பக்கவாதம், கர்ப்ப பை கட்டிகள் மற்றும் குழந்தையின்மை, சர்க்கரைநோய் போன்ற அனைத்துவிதமான நோய்களையும் சரி செய்யலாம்.

சிறிய நோய்க்கே பல்லாயிரம் ரூபாய் செலவழித்து இறுதியில் வலியும், வீண் பண விரையமும் அடைந்து மன அழுத்தம் ஏற்பட்டு மேலும் நம் உடலை கடுமையாக வதைக்கின்றோம். ஆனால் எந்தவித மருந்து, மாத்திரைகள் இன்றி மிக மிகக் குறைவான செலவில் ஆரோக்கியமான அக்குப்பஞ்சர் சிகிச்சையை நாம் ஏன் ஒருமுறை செய்து பார்க்க கூடாது.

நோய் முற்றிய நிலைக்கு பின் விழித்து எந்தவித பயனுமில்லை என்பதையும், மருத்துவம் குறித்து நன்கு அறிந்த மருத்துவர்களைத்தான் நாம் அணுகுகின்றோமா என்ற அறிவு இல்லாது போனால் அதன் பாதிப்பு நமக்கே. ஆகையால் வலியற்ற புது வழியான அக்குப்பஞ்சர் சிகிச்சைக்கு மாறுங்கள். எதுவும் எடுத்தவுடன் மாற்றம் நிகழாது. நமது நம்பிக்கையும், முழு ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே எந்த மருத்துவச் சிகிச்சையிலும் வெற்றி கிட்டும். இதே நேரத்தில் நாம் உண்ணும் உணவு மற்றும் வாழும் வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது மிக மிக அவசியமானது என்று தனது உரையை முடித்துக் கொண்டார் அக்குப்பஞ்சர் டாக்டர் கே.உமா சித்தீஸ்வரி.

டாக்டர் கே.உமா சித்தீஸ்வரி: 92451 25921, 90877 22446.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இவரிடம் சிகிச்சை பெற்ற ஒருவரின் அனுபவம்:
சென்னை நுங்கம்பாக்கம் சூளை மேட்டுப் பகுதியில் வசித்து வரும் உஷாராணி சிவக்குமார் கடந்தாண்டு மரணத்தைச் சந்தித்து தற்போது அக்குப்பஞ்சர் சிச்சை வாயிலாக மீண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, எனக்குப் பித்தப்பையில் கல் இருந்த காரணத்தால் அதனை சரி செய்ய முதலில் சித்தா, ஆயுர்வேத சிகிச்சை எடுத்தேன். பலனின்றி இறுதியாக ஹலோபதி சிகிச்சையின் படி அறுவை சிகிச்சை மேற்க் கொண்டு மாத்திரைகள் உட்க்கொண்டேன். சில நாட்களில் திடீரென முழங்காலில் கடுமையான வலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதம் வீக்கம் அடைந்தது.

உஷா

என்னவென்று தெரியாமல் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று மறுபடியும் மருந்து. மாத்திரைகள், ஊசி மற்றும் கால்களில் அணிய ஷாக்ஸ் கொடுக்கப்பட்டது. இந்த ஷாக்ஸ் இரவில் படுக்கும்போதும் மட்டுமே கழற்றிவைப்பேன். ஆனால் எந்தவித பலனும் இல்லை அதற்கு மாறாக மூச்சுவிட மிகவும் சிரமமாக இருந்தது. படுத்தால் பின் தலைப் பகுதி கனமாக இருக்கும். எப்போது வேண்டுமானாலும் இறந்து விடுவோம் என்ற நிலையில், உறவினர் ஒருவர் கூறியதன் பேரில் மதுரையிலுள்ள சுகானந்தம் அக்குப்பஞ்சர் மருத்துவமனைக்கு வந்தேன்.

எனது பிரச்சனைகள் குறித்து முழுமையாகக் கேட்டு பரிசோதனை செய்ததில் எனது இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அடுத்த 10 நாட்களில் கால்களில் அணிந்திருந்த ஷாக்ஸ் தேவையில்லை என்ற நிலைக்கு முன்னேற்றம் அடைந்தேன். இச்சிகிச்சையால் 2 மாதங்களில் குணமடைந்து இன்று நிம்மதியாக வாழ்கின்றேன். நானும் மற்றவர்களைப் போல் இந்த மருத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லாதிருந்தேன். இன்று பலருக்கும் அக்குப்பஞ்சர் சிகிச்சையை பரிந்துரை செய்கின்றேன். நல்ல மருத்துவ சிகிச்சையை நாம் உணர்ந்து நம்மை நாம் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். என்னை மீட்டுக் கொடுத்த மருத்துவர் இருவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கண் கலங்கியபடி உஷா.

உஷா: 94450 66838

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெளியீடு ஹலோ மதுரை மாத இதழ்
ஆண்டு: 01.04.2017
எழுத்து: மு.இரமேஷ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

Spread the love

Reporter Ramesh

15 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைதுறையில் பணிபுரிந்து வருகின்றேன். சிறப்புக் கட்டுரைகள், சிறப்புச் செய்திகள் எழுத்து வடிவிலும், காணொலியாகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு. பத்திரிக்கைத்துறையில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகின்றேன். அந்த மாபெரும் கடலில் ஒரு இலையாகவே மிதந்து தொடர்ந்து மாணவனாக கற்று வருகின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலிக்கு நிருபராகவும், புகைப்படக்கலைஞராகவும் பணியாற்றுகின்றேன். அலைபேசி எண்: 9566531237.

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat