ஆரோக்கியம்

ஆரோக்கியமான அகத்திக் கீரை

அகத்தி – அகத்தை சுத்தப்படுத்துவதால் அதை அகத்தி கீரை என அழைக்கின்றனர். வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு. அகத்திக்கீரையுடன் சுத்தமான பசு நெய்யும் சின்ன வெங்காயமும் சேர்த்து கூட்டாகவோ, பொரியலாகவோ செய்து தொடர்ந்து சாப்பிட்டுவர மிகச் சிறந்த பலன்களைத் தரும். நீர்-73 சதவீதம் புரதம்-8.4சதவீதம் கொழுப்பு-1.4 சதவீதம் தாதுப்புக்கள்-2.1சதவீதம் நார்ச்சத்து-2.2சதவீதம் மாவுச்சத்து-11.8சதவீதம் இந்த கீரையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன் படுத்தும் இயல்புடையது. குடல்புண், அரிப்பு, சொறி சிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உணவாக உண்பதால் குணமாகும். தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலிக்கு அகத்திக் கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும். ரத்தப் பித்தம், ரத்த கொதிப்பு ஆகியவை அகத்திக்கீரையை உண்பதால் அகலும்.

இக்கீரையில் அடங்கியுள்ள புரதச்சத்து மிகச் சிறந்த புரதமாக கருதப்படுகிறது. சுண்ணாம்புச்சத்து, இக்கீரையில் அதிக அளவில் உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இக்கீரையில் உயிர்ச்சத்துக்கள் நிறைய உள்ளது. வைட்டமின் ஏ 100கி, 9000 கலோரிகள் உள்ளது. அகத்தி கீரை ரத்த குழாய்கள் தடிமன் ஆவதை தடுத்து நிறுத்துகிறது. கொழுப்புகளை கரைக்கிறது.

Spread the love

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat