ஆரோக்கியம்

ஆரோக்கியம் தரும் அன்னாசி பழம்

பழங்களிலேயே அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும். இனிமையும், மணமும் நிறைந்த இந்த பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது.  பித்தக் கோளாறுகளை அன்னாசி பழம் விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்புச்சத்து குறைவு, நார்ச்சத்து அதிகம். தொப்பையை கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. இது சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலியை குறைக்கும். பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகை தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும். குழந்தைகளுக்கு அன்னாசி இலைச்சாறு வயிற்று புழு கொல்லியாக செயல்படுகிறது.

அன்னாசிப்பழத்தின் சிறப்பு ப்ரோமிலைன்’ என்ற காம்ப்ளக்ஸ் பொருள் ஆகும். இது உடல் எடையைக் குறைக்கும் சக்தி கொண்டது. அதோடு உடலில் ஏதேனும் ரத்தக்கட்டு, வீக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றை சீர் செய்யும் தன்மை ப்ரோமிலைனு’க்கு உண்டு. அன்னாசி பழத்தை தோல் சீவிய பிறகு வில்லைகளாக நறுக்கிச் சாப்பிடுவோம். அப்போது வில்லைகளின் நடுப்பாகத்தை, கட்டையாக உள்ளது என்று சாப்பிடாமல் எறிந்து விடாதீர்கள். அந்த நடுப்பகுதியில்தான் அதிக அளவில் ப்ரோமிலைன்’ உள்ளது.

நம் உடலின் நச்சுப் பொருட்களை நீக்கும் ஆன்டி ஆக்சிடன்ட்’ உள்ளது. அன்னாசிப்பழம் உடல் சூட்டினை அதிகரிக்கக்கூடியது. அதனால் இதனை அளவாக சாப்பிடலாம். தயிருடன் சேர்த்து சாப்பிடலாம். பழ ரசமாக, நீர் சேர்த்துச் சாப்பிடலாம். மற்ற காய்கறி சாலட்டுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்களும், மூல நோய் உள்ளவர்களும் இப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

two × 1 =

Related Articles

Close