இயற்கை மருத்துவம்மருத்துவம்

ஆரோக்கியம் தரும் ஓமத்திரம்

ஓமம் சீரக வகையைச் சேர்ந்தது. ஓமத்திரம் என்று அழைக்கப்பெற்றாலும் இதன் பெயர் ஓமத் திரவம் ஆகும். இதில் பாஸ்பரஸ், கரோட்டின், லிபோக்ளோபின்,தயாமின், மற்றும் நியாசின் போன்ற சத்துக்களும், கால்சியம், இரும்புச்சத்து போன்ற கனிமச்சத்துக்களும் இருக்கின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிறு சம்பந்தமான எந்த பிரச்சனைக்கும் இந்த ஓமத் திரவத்தை பயன்படுத்தலாம்.

சளி, ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்றவற்றை சரி செய்வதற்கும் ஓமத்தின் நீரை பயன்படுத்தலாம். காற்றின் மாசுவினால் ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கு, ஓமம் (omam) ஒரு சிறந்த மருந்தாகும். ஓமத்தை ஒரு துணியில் கட்டி மூக்கினால் நுகர்ந்தால், மூக்கில் நீர் ஒழுகுதல், சளி, மூக்கடைப்பு ஆகியவை குணமடையும்.

கருவுற்றிருக்கும் பெண்களுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல்கூட இந்த ஓமத்திரம் பருகினால் நன்றாக இருக்கும். ஆனால் ஓமம் உடலில் சூட்டை அதிகரிக்கும் என்பதால், கர்ப்பிணி பெண்கள் இதை கவனமாக அடிக்கடி குடிக்காமல், வாரம் ஒரு முறை பருகினால் நல்லது. கர்ப்பகாலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சரி செய்யவும் இதை தாராளமாக பயன்படுத்தலாம்.

வாய்வு, வயிற்று வலி ஆகிய உடல் உபாதைகளுக்கு ஓமத் திரவம் அற்புதமாக வேலை செய்யும் மருந்து. பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஓமத்திரம் நல்ல ஜீரண சக்தியை தரும். ஜீரணத்திற்கு மட்டுமின்றி சளி, இருமல் போன்ற தொந்தரவிற்கும் ஓமத் திரவம் அருமருந்து.

Spread the love

kamali

ஹலோ மதுரை மாத இதழின் வடிவமைப்பாளராக செயல்படுகின்றேன். அத்துடன் பெண்களுக்கான அழகு குறிப்புகள் முதல் மருத்துவம் வரையிலாக தகவல்கள் மற்றும் கட்டுரைகள் எழுதுவது எனது பொழுதுபோக்கு. மேலும், சமையல் குறித்த எழுத்துகளும், காணொளிகளும் படைப்பாக செய்து வருகின்றேன். இது தவிர மதுரை குறித்த வரலாற்று தகவல்கள் மற்றும் ஆன்மீகம் குறித்தும் எழுதி வருகின்றேன்.

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat