செய்திகள்மதுரை

இந்தியன் ஆயில் டிஜிட்டல் பேமென்ட் அறிக்கை

இண்டேன் விநியோகஸ்தர்கள், இண்டேன் எல்பிஜி வீட்டு உபயோக சிலிண்டர்களை வாடிக்கையாளர்களின் இல்லங்களுக்கு வழங்குகிறார்கள். சிலிண்டர் ஒப்படைத்த உடன் வாடிக்கையாளர் கையொப்பமிடும் கேஷ் மெமோவில் சில்லறை விற்பனை விலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விலை, டெலிவரி செய்யப்படும் சிலிண்டருக்கான ஒப்படைப்பு கட்டணத்தை உள்ளடக்கியதாகும்.

இண்டேன் சிலிண்டருக்குரிய சரியான விலையை செலுத்துவதற்காக, வாடிக்கையாளர்களை டிஜிட்டல் பேமென்ட் செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறோம்.

1. ஆன்லைனில் பேமென்ட் செலுத்துவதற்கான வழிமுறை & வாடிக்கையாளர்கள் IVRS மூலம் சிலிண்டர் பெற புக்கிங் செய்தவுடன் வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள மொபைல் GsqUS மெசேஜ் மூலமாக ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான லிங்க் அனுப்பி வைக்கப்படும். இந்த லிங்க் ஒரு நாளைக்கு மட்டுமே திறந்திருக்கும். அந்த ஆன்லைன் முகவரியை கிளிக் செய்து வாடிக்கையாளர்கள் கேஷ் மெமொவில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ&வாலெட் ஆகிய பல்வேறு ஆன்லைன் பேமென்ட் வழிமுறைகள் வாயிலாக செலுத்தலாம். இந்த வழிமுறையில் சிலிண்டர் டெலிவரிக்கு பின் வாடிக்கையாளர்கள் எந்த விதமான கட்டணத்தையும் செலுத்த வேண்டாம்.

2.முதலில் குறிப்பிடப்பட்ட வழிமுறையை வாடிக்கையாளர்கள் கையாளாவிட்டால், டெலிவரி பணியாளரை, தங்களிடம் சிலிண்டரை ஒப்படைக்கும் தருணத்தில் டிஜிட்டல் பேமென்ட் பெறும்படி வலியுறுத்தலாம். அவர்களை பேமென்ட் பெறும் கருவியை (mPOS) கொண்டு வருமாறு கூறலாம். அந்த கருவியை கொண்டு நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ&வாலெட், ஆஏஐM, க்கஐ, Google கச்தூ, PayTM ஆகியவை மூலமாக பில் செலுத்தலாம். பணமாக செலுத்துவதை இறுதி வழியாக வைத்துக் கொள்ளலாம்.

3.சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்ட உடன் வாடிக்கையாளர்களுக் சிலிண்டர் அனுப்பி வைக்கப்பட்டது குறித்து மெசேஜ் அனுப்பப்படும். வாடிக்கையாளர்கள் சேவை குறித்த கருத்துக்களைத் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள், சற்று நேரம் JxUQ பின்வருவபவை பற்றி கருத்துக்களை தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியமானது.

அ) சிலிண்டர் நன்றாக சீலிடப்பட்டுள்ளது.

ஆ) சிலிண்டர் எடை பற்றி சோதித்து காண்பிக்கப்பட்டது.

இ) சிலிண்டரில் கசிவு உள்ளதா என்று பரிசோதித்து பார்க்கப்பட்டது.

ஈ) கேஷ் மெமோவில் உள்ளபடி சிலிண்டர் கட்டணம் வாங்கப்பட்டது.

உ) ஒட்டு மொத்தமான வாடிக்கையாளர்கள் அனுபவம் பற்றி ரேட்டிங் செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் நாங்கள் நன்றாக சேவை வழங்க முடியும்.

இந்தியன் ஆயில் நிறுவனம், டெலிவரி செய்பவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பதை ஆதரிக்கவில்லை.

ஏதேனும் விசாரணைகளுக்கும், வழி காட்டுதலுக்கும் கீழ்க்காணும் வாடிக்கையாளர்களுக்கான சேவை எண்களில் காலை 9.30 முதல் மாலை 5.15 வரை தொடர்பு கொள்ளலாம்.

சென்னை : 044 24339235 / 24339236 , மதுரை : 0452 2533956,

திருச்சி: 0431 2740066 / 2740880, கோயம்புத்தூர்: 0422 2247396 / 2240696

எல்பிஜி குறித்த அவசர சேவை குறித்து 1906 என்ற எண்ணில் 24 மணி நேர சேவையை அணுகலாம்.

இண்டேன் குறித்த புகார்களுக்கு 1800&2333&555 என்கிற கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Show More

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

eight − four =

Close