இஸ்லாம்வீடியோ

இந்தியாவின் முதல் பள்ளிவாசல்

இந்தியாவின் முதல் பள்ளிவாசல் பற்றி உங்களுக்குத் தெரியுமா ? அந்த பள்ளிவாசல்  இந்திய மாநிலமான கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூர் என்ற ஊரில் உள்ளது.  அதன் பெயர்  சேரமான் ஜும்மா மசூதி (Cheraman Juma Masjid). இது கி.பி 612-ம் ஆண்டு மாலிக் பின் தீனார் என்பவரால் கட்டப்பட்டது.  இது இந்தியாவின் முதல் பள்ளிவாசல் மற்றும் உலகின் இரண்டாவது ஜும்மா பள்ளிவாசல் ஆகும். இதன் பழைய தோற்றம் மற்ற உலக பள்ளிவாசல்கள் போல் அல்லாமல் கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது.

சரி, இந்த பள்ளிவாசல் எப்படி உருவாதனது ? இதற்கு ஏன் சேரமான் பள்ளிவாசல் என்ற பெயர் வந்தது ? இதன் சிறப்புகள் குறித்துப் பார்ப்போம்…. கேரளாவில் கொடுங்கல்லூரைத் தலைநகராகக்கொண்டு ஆண்டுவந்தார் சேரமான் பெருமாள். அவர் ஒரு நாள் இரவு வானில் நிலவு இரண்டாக பிளந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இதை பற்றி விசாரிக்கும் பொழுது அங்கு வியாபார நோக்கமாக வந்த அராபியர் கூட்டம் மூலம் முகம்மது நபி நிலவை பிளந்த நிகழ்வை பற்றியும், முகம்மது நபியைப் பற்றியும், இஸ்லாம் மதத்தை பற்றியும் கேள்விப்பட்டனர். மேலும் அவர்கள் கூறிய செய்திகளிலால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அந்த அரபியார் கூட்டத்துடனேயே மெக்காவிற்கு சென்று முகம்மது நபியைச் சந்தித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை ஏற்ற சேரமான் பெருமாள் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் பெற்றார்.

அதன் பிறகு சேரமான் தனது ராஜ்ஜியத்தைப் பல பாகங்களாகக் கூறுபோட்டு சிற்றரசர்களுக்குக் கொடுத்துவிட்டு மக்காவுக்குப் புனித பயணத்தைத் தொடங்கினார். அங்கே சில காலம் முகமது நபியுடன் தங்கி, இஸ்லாம் மதம் பற்றிய தெளிவு பெற்றார்.

பிறகு தனது நாட்டுக்குத் திரும்பிவந்து கேரளாவில் மலபாரிலுள்ள மற்ற அரசர்களுக்கு இஸ்லாம் மதத்தின் மகத்துவத்தைப் பற்றி விளக்க நினைத்தார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஏமன் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (Port of Zabar, Yeman) நோய் வாயப்பட்டு இறந்தார்.அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

அதன்பின் அவரது சிஷ்யனான மாலிக் பின் தீனாரின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்து, சேரமான் பெருமாள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தைக் கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் தங்கள் குடும்பத்தாருக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனாருக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளைக் கட்டுமாறும்  கேட்டுக் கொண்டனர். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும், மசூதிகளைக் கட்டுவதற்கும் மாலிக் பின் தீனாருக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் கி.பி 612-ல் கொடுங்களூரில் முதல் மசூதியைக் கட்டினார். சேரமான் பெருமாள் அவர்களின் உதவியினால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் மசூதி, சேரமான் அவர்களை நினைவு கூறும் பொருட்டு சேரமான் ஜும்மா பள்ளிவாசல் என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது. இப்படித்தான் உருவானது இந்தியாவில் முதல் பள்ளிவாசல்.

சில நாட்களுக்குப் பிறகு மாலிக் பில் தினார் தன் மகன் ஹபீப் பில் மாலிக்கை அடுத்த ‘காசி’யாக நியமித்தார். கேரளாவின் பல இடங்களில் மக்கள் வருகை அதிகரித்ததால் பள்ளிவாசலின் முன் பகுதி பெரிதாக்கப்பட்டது. மசூதியின் உள்ளே ஒரு பெரிய விளக்கு வைக்கப்பட்டுள்ளது. நமாஸ் பண்ணுமிடம் ‘மிஹ்ராப்’ உள்ளது. நூறாண்டு பழமையான பேச்சுமேடை உள்ளது. பண்டைக்காலச் சுவரெழுத்துகள் உள்ளன. பள்ளிவாசலின் வெளியே ஒரு பெரிய குளம் உள்ளது.

இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை ஆதாரமாகக் கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசூதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கிக் கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கிக் கட்டப்பட்டுள்ளது. இதில் கோபுரம், அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது.

இந்த மசூதி முகம்மது நபியின் காலத்திலேயே கட்டப்பட்டது.இது இன்றும் எல்லா மதத்தினரும் வந்து வழிபாடு செய்யும் ஒரு திருத்தலமாக உள்ளது. இன்றும் இந்த மசூதி சேரமான் பெருமாளின் வம்சத்தினராண கொச்சின் அரச குடும்பத்தினருக்கு முதல் மரியாதை கொடுக்கிறது. இங்கு மிகவும் பழமையான ஒரு தாமிர விளக்கு உள்ளது. இதற்கு எல்லா மதத்தினரும் எண்ணெய் கொண்டு வந்து விடுகின்றனர். மேலும் இங்குள்ள ரோஸ்‌வுட் சொற்பொழிவு மேடையும் (மிம்பர் படி) கரும்பளிங்குக் கற்களும் மிகவும் பழமையானதாகும். இதில் கரும்பளிங்குக் கற்கள், மெக்காவில் இருந்து எடுத்து வரப்பட்டதாக நம்பப்படுகிறது.

சேரமான் மசூதியைப் பார்க்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் சாதி மத வேறுபாடின்றி வருகின்றனர். ரம்ஜான் மாதத்தில் சிறப்பு நோன்பும் பிரார்த்தனையும் நடத்தப்படுகின்றன. கொடுங்கல்லூரில் வாழும் மற்ற மதத்தினரும் நோன்பு நாட்களில் பள்ளிவாசலில் வந்து நோன்பு திறக்கின்றனர்.

சேரமான் மசூதியின் பழைய உருவம் மரத்தில் வடிவமைக்கப்பட்டு அங்கிருக்கும் அருங்காட்சியகத்தின் நடுவில் வைக்கப்பட்டுள்ளது. ஏழைகளின் நல்வாழ்வுக்காகப் பள்ளிவாசல் சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. பெண்களுக்குத் திருமண உதவி, வீடு கட்ட உதவி, மருத்துவ உதவி போன்றவை செய்யப்படுகின்றன.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Hello Madurai Team
Cont: 9566531237, 8754055377.

Hello Madurai App
Hello Madurai Monthly Magazine
www.hellomadurai.in
E-mail: hellomadurai777@gmail.com

Spread the love

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat