பைக்வாகனம்

இந்தியாவில் முதன் முதலாக டிரையம்ப் பைக் அறிமுகம்

இந்தியாவில் முதன் முதலாக அடுத்த மாதம் தனது பைக் விற்பனையை துவங்க திட்டமிட்டுள்ளது டிரையம்ப் மோட்டார் நிறுவனம். சும்ம கலக்கலான பார்ப்பதற்கு படு கவர்ச்சியாக இருக்கும் இந்த பைக் இந்திய சாலைக்கு ஏற்றதாகும்.

இதே நேரத்தில் இந்திய இளைஞர்களுக்கு எந்த வகையில் இது பிடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிறுவம் புதிய 2020 டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர்  பைக்அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை டிரையம்ப் பேஸ் மாடலான எஸ் வேரியண்ட் மற்றும் டாப் எண்ட் ஆர்எஸ் வேரியண்ட் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் இந்த வழக்கத்தை மாற்றி டிரையம்ப் நிறுவனம் புதிய மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் வெளியிட இருக்கிறது.

டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர் மாடலில் 765சிசி, இன்-லைன் மூன்று சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 116 பிஹெச்பி பவர், 77 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதே என்ஜின் ஆர்எஸ் மாடலில் 121 பிஹெச்பி பவர், 79 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

புதிய மோட்டார்சைக்கிளில் ஃபுல் கலர் டிஎஃப்டி ஸ்கிரீன், ஒருபகுதி அனலாக் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் பெரிய அனலாக் ரெவ் கவுண்ட்டர் வழங்கப்படுகிறது. ஆர் மாடலில் பிரெம்போ எம்4.32 நான்கு பிஸ்டன் மோனோபிளாக் கேலிப்பர்கள், 310 எம்எம் முன்புற டிஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளன.

Car Ganesh

கார், பைக் மீது நான் கொண்ட காதலினால் என் பெயரை கார் கணேஷ் என்று மாற்றிக் கொண்டவன். எவ்வளவு தூரமாக இருந்தாலும் சரி, அது என்ன பைக்காக இருந்தாலும் சரி, பெட்ரோல் இருந்தால் மட்டும் போதும், போய்க் கொண்டே இருப்பேன் சலிக்காது சாலைகளின் மீது.பைக்கே இப்படி என்றால் கார் எல்லாம் சொல்லவே வேண்டாம். டப்பா காராக இருந்தாலும் இந்த ராஜா கைய வச்சா அது ராங்கா போவதில்லை. அந்த பாட்டுத்தான். எல்லாவிதமான பைக்கிலும் சவாரி செய்து ஒரு வலம் வந்திருக்கும் நான் ஒரு சில கார்கள் மட்டும் கனவாகவே உள்ளது. இந்த பக்கத்தில் புதிய கார், பைக், மெக்கானிக், டிப்ஸ் என எல்லாமே உங்களுக்கு அள்ளித் தரப்போகின்றேன். நிறை இருந்தால் பாராட்டுங்கள், குறை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.இப்படிக்கு... உங்கள் கார் கணேஷ்
error: Copy Right Hello Madurai !!
Open chat