கவிதைபடைப்புகள்

உன் வரவு

உன்னுடன் பேசாமல் கடந்துவிட்ட நாட்களெல்லாம் கிழிக்காமல் நாட்காட்டியில்

நீ இல்லா வேளையில் சமைத்து வைத்த உணவெல்லாம் வீணாய்த்தான் போயின

உனைக்காணா கண்ணுக்கு தூக்கமெல்லாம் கடினமெனவானது

காத்திருந்த காலமெல்லாம் கனவாய் கலைந்துவிடும்போல்

உன் வரவு சேதி காதில் எட்டிவிட

தேடித்தேடி சேர்த்து வைத்தேன் வார்த்தைகளை உன்னுடன் கதைத்துவிடும் ஆசையிலே

அம்புகளாய் பாய்ந்து வந்த பார்வையிலே பாழாய்த்தான் போனதந்த ஆசையெல்லாம்

விக்கி நின்ற வார்த்தைகளை விழுக்கிக்கொண்டு விழித்து கொண்டிருந்தேன் விழிபிதுங்கி

உன் கண் பார்த்து பேசிவிடும் வேளை தேடி வேண்டி நின்றேன்

நீ கிளம்பும் நாள் வரை யோசித்தே நேரமெல்லாம் கழித்துவிட்டேன்

போய்வரவா என்று சொல்லி சென்று விட்டாய் சுலபமாய் நீ

இன்னும் எத்தனை நாள் காத்திருப்பது நானும் அந்த நாட்காட்டியும்……

இரஞ்சிதபிரியா.மு

கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை பொழுதுபோக்காக எழுதி வருகிறேன்

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat