பெண்கள்மெடிக்கல்

எது சிறந்த சோப்பு ?

உடலின் மற்ற பகுதிகளில் உள்ள சருமத்துடன் ஒப்பிடும் போது, உங்கள் முகத்தில் உள்ள சருமம் மிகவும் மென்மையானது. சருமத்தின் தடிமன் மாறுபடக்கூடியது. முகத்தில் உள்ள சருமம் மென்மையானது என்பதால் அதற்கேற்ற முறையில் பராமரிக்க வேண்டும். குறிப்பாக கண்களைச்சுற்றியுள்ள சருமம் மிகவும் மென்மைனாவை. எனவே உங்கள் சருமத்தின் மீது மென்மையாக இருக்கும் பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.

முகத்தில் உள்ள சருமத்தில் நிறைய நுண் துளைகள் உள்ளன. இவற்றை சரியாக கவனிக்காவிட்டால், பரு, கோடுகள் போன்ற பாதிப்புக்கு சருமம் உள்ளாகும். உங்கள் முகத்தில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய், சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து தற்காக்கிறது. இதற்கு மாறாக,சோப்பு பயன்படுத்தும்போது, அழுக்குடன் சருமத்தின் இயற்கையான எண்ணெயும் வெளியேற்றப்படுகிறது.

சோப்பு கட்டி, சருமத்தின் இயல்பான பிஎச் அளவு சமநிலையை பாதித்து, அதை உலர வைக்கிறது. உங்கள் சருமம் இயல்பாக அமிலத்தன்மை கொண்டது. அதன் பிஎச் அளவு 4 முதல் 5.5 ஆக இருக்க வேண்டும். ஆனால் வழக்கமான சோப்பு கட்டி ஆல்கலைன் தன்மை கொண்டது. எனவே முகத்தில் பயன்படுத்தக்கூடாது. சோப்பின் ஆல்கலைன் தன்மை, சருமத்தை உலர வைத்து, மென்மையான முக சருமத்தின் ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது. சோப்பு பயன்பாடு எரிச்சல் போன்ற பாதிப்பையும் உண்டாக்கி, சருமத்தை மேலும் பாதிக்கும். ஆகவே உங்கள் சருமத்திற்கு ஏற்ற சோப்பை மட்டுமே பயன்படுத்துங்கள். அடிக்கடி பிராண்டையும் மாற்றாதீர்கள்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

sixteen − 7 =

Related Articles

Close