கட்டுரைகள்செய்திகள்
Trending

எல்லாம் உண்மையல்ல பொம்மை ; அசத்தும் பல் மருத்துவர்

ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமை ஒளிந்திருக்கு… அதை நேரம் ஒதுக்கிப் பார்த்து பாராட்டிட இங்கு யாருக்குத்தான் மனசிருக்கு… மற்றவர்களின் கைத்தட்டலுக்காக திறமை சாலிகள் காத்திருப்பதில்லை. அவர்கள் தங்கள் காலம் முழுவதும் அதற்கான ஒன்றைத் தேடி எவர் முன்பும் நிற்பதுமில்லை. அதற்கு மாறாக தங்களது ரசனைகளை வெவ்வேறாக வடிவமைத்துக் கொண்டே மிகப் பெரிய கோட்டையை கட்டி விடுகின்றனர். பின்பு எது வந்தால் என்ன ? அது என்ன மண் கோட்டையா இடிந்து விட… மாபெரும் மலைக் கோட்டையாக உருமாறியிருக்கும். அப்படித்தான் நம் கண்கள் இது பொய்யா ? மெய்யா ? என அற்புதமான கலையை யாருக்கும் தெரியாமல் செய்து வருகிறார் டாக்டர் கிருத்திகா (பல் மருத்துவர்). விடுவோமா நாம்… நண்பரின் உதவியுடன் வீட்டிற்குச் சென்று விட்டோம்.

என்னதான் அப்படி என்ற மன நிலையில்தான் அங்கு சென்றோம். தட்டில் வரிசையாக இனிப்பு, காரம், முட்டை, பிரட் என எக்கசக்க பலகாரங்கள் வரிசையாக இருந்தன. ஆர்வத்துடன் எடுத்துச் சுவைக்க… தடுத்து நிறுத்தினார் கிருத்திகா… அது அத்தனையும் மெழுகு என்பது அதன் பின்புதான் தெரியும்.


நிஜமென்று நம்பவைக்கும் மெழுகு இனிப்பு

தொடர ஆரம்பித்தார் நம்மிடம் கிருத்திகா பிரியதர்சினி… விருதுநகரை பூர்வீகமாகக் கொண்ட நாங்கள் அப்பாவின் வேலை காரணமாக மதுரை திருநகர் பகுதியில் குடியேறினோம். அப்பா மாணிக்கம், அம்மா கமலச்செல்வி, ஒரே அண்ணன். சமீபத்தில்தான் பல் மருத்துப் படிப்பினை முடித்தேன். எனது அம்மா சேலையில் வித விதமான மாடலிங் செய்வாங்க. அதை பார்த்து சிறு வயதிலிருந்தே பெயின்டிங், வால் ஹேங்கிங், டிராயிங் என ஆரம்பித்தேன்.

என்னென்ன செய்கிறீர்கள் ?
முதலில் ஆர்ட், பெயின்டிங் அதன் பின் மினியேச்சர், மெழுகு உணவுப் பொருட்கள், எரேசர் கலெக்சன் (ரப்பர்), கீ செயின் கலெக்சன், பேபர் (காகிதம்) கார்விங், கிளே டால், எனாமல் பெயினிடிங், கிளாஸ் பெயின்டிங், ஸ்டோன் ஒர்க்ஸ், ஷேரி பெயின்டிங், டிரே கார்டனிங், போன்சாய், பிளவுஸ் ஒர்க்ஸ், வால் ஹேங்கிங், எக் (முட்டை ஓடு) கார்விங் என நிறைய…


நிஜமென்று நம்பவைக்கும் மெழுகு காரம்

மெழுகில் உணவுகள்:
மெழுகினை பயன்படுத்தி உணவுக்கு எந்தவித வண்ணமோ அதனை சேர்த்து முடிந்த வரை அந்த உணவு போலவே நான் செய்துவிடுவேன். உதாரணத்திற்கு காரச்சேவு, கேக், பிரட், முறுக்கு, இட்லி, ஆம்லேட், தயிர் சாதம் என ஒவ்வொன்றாக நம்மிடம் எடுத்துக் காட்ட அது அத்தனையும் மெழுகு என்று நம்மால் நம்பப முடியவில்லை.

கீ செயின், எரே­ர்:
எனக்கு கீ செயின் கலெக்சன் ரொம்ப பிடிக்கும். ஆறாம் வகுப்பிலிருந்து இதுவரை 700 ரேர் கீ செயின்கள் சேகரித்துள்ளேன் என ஒரு பக்கெட் முழுக்க நம்மிடம் காட்டினார். அதேபோன்று எரேசர் கலெக்சன் 250க்கு மேல் வைத்துள்ளார்.


கீ செயின் மற்றும் அசல் இட்லி, சட்னி போல் நகல்

முட்டை ஓட்டில் டிசைன்:
முட்டை ஓட்டில் மிக நேர்த்தியாக நவீன கருவி கொண்டு துளையிட்டு வித விதமாக டிசைன் செய்து வண்ணமிட்டுள்ளார்.

எப்படிக் கற்றுக் கொண்டீர்கள் ?
ஒரு முறை ஒரு ஓவியர் மிகத் தத்ரூபமாக வரைந்திருந்ததை நாளிதழ் ஒன்றில் பார்த்தேன். அது பல மில்லியனுக்கு விலை போனது. அந்த உண்மைத் தன்மையான தோற்றம் எனக்குள் தூண்டுகோலாக அமைந்தது. அன்றிலிருந்து நான் நேச்சராக செய்ய வேண்டும் என்று இதனை ஆரம்பித்தேன். இதற்காக சென்னை (வேக்ஸ்), மும்பை (டிரே கார்டனிங், போன்சாய்) ஆகிய இடங்களுக்குச் சென்று கற்றுள்ளேன். சிலவற்றை ஆன்லைனில் பார்த்து கற்றுக் கொண்டுள்ளேன். ஒரு கட்டத்திற்கு மேல் எதைப் பார்த்தாலும் போதும் அதை அப்படியே செய்து விடுவேன்.


கீ செயின் சேகரிப்பு

பேப்பர் டால்:
இவர் செய்ததிலேயே மிகவும் நம்மை பிரம்மிக்க வைத்தது பேப்பர் டால் தான். வெறும் கட்டுக் கம்பியைக் கொண்டு ஒரு டால் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து அதேபோன்ற உருவத்தை கட்டுக் கம்பியால் அமைத்து அதன் மேல் பேப்பர் வைத்து ஒரு முழுமையான அழகிய டாலை செய்து விடுவேன். அப்படி செய்த அழகிய டாலை நாம் பார்த்து ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்று விட்டோம். இதேபோன்று என்ஜி டாய் கிளே-ல் இரண்டு டால் செய்திருந்ததை காண்பித்தார்.


குடும்ப உறுப்பினர்களுடன் கிருத்திகா… கையில் இருப்பது பேப்பர் டால் (காகித பொம்மை)

எங்கள் வீட்டில் அப்பா, அம்மா, அண்ணா என அனைவரும் என்னுடைய திறமையை ரசிப்பாங்க. மினியேச்சர்ஸ் செய்வதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம். 3டி வடிவில் அச்சுஅசலாக செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றேன் எனப் புன்னகைத்தார் டாக்டர் கிருத்திக்கா.

தனக்கு கிடைக்கும் பணத்தினை டிரஸ், மேக்கப் செட், விதவிதமான பேக், நெயில்பாலிஸ், லிப்ஷ்டிக் என வழக்கமாக பெண்கள் ஆசைப்படும் எந்த பொருள் மீதும் விருப்பமின்றி அந்தப் பணத்தை எல்லாம் கீ செயின், எரேசர், மெழுகு உணவு, டால், மினியேச்சர் என தனக்கென ஒரு தனி வித்தியாசமான உலகத்தில் வாழ்ந்து வரும் கிருத்திகா சிறந்த திறமைசாலிதான். இவர் செய்திருக்கும் அத்தனையும் பொம்மை பொம்மையில்லை உண்மை என்று பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டு விடைபெற்றோம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெளியீடு: ஹலோ மதுரை மாத இதழ்
ஆண்டு: 01.0.2017
எழுத்து; மு.இரமேஷ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Reporter Ramesh

15 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைதுறையில் பணிபுரிந்து வருகின்றேன். சிறப்புக் கட்டுரைகள், சிறப்புச் செய்திகள் எழுத்து வடிவிலும், காணொலியாகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு. பத்திரிக்கைத்துறையில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகின்றேன். அந்த மாபெரும் கடலில் ஒரு இலையாகவே மிதந்து தொடர்ந்து மாணவனாக கற்று வருகின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலிக்கு நிருபராகவும், புகைப்படக்கலைஞராகவும் பணியாற்றுகின்றேன். அலைபேசி எண்: 9566531237.

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat