சினிமாவிமர்சனம்

கண்ணும் கண்ணும் கொள்ளயடித்தால்: எதிர்பாராத ரகளை, ரசனை, காதல் கொள்ளை

MOVIE REVIEW - திரை விமர்சனம் - Kannum kannum Kollaiyadithaal

கண்ணும் கண்ணும் கொள்ளயடித்தால்

திரைப்படத்தை பற்றி சொல்லப்பட்ட முக்கியமான மேற்கோள்களில், ஒரு நொடிக்குள் சொல்லப்படும் 24 பொய்களின் தொகுப்பே திரைப்படம் என்ற மைக்கேல் ஹேன்கியின் மேற்கோள் மிக மிக முக்கியமானது, அப்படி ஒரு நொடிக்குள் உருவாக்கப்படும் பொய்களை எந்த அளவு நம்பகத்தன்மையோடு உருவாக்குகிறீர்கள் என்பதில் தான் ஒரு இயக்குநரின் வெற்றியும் தோல்வியும் அடங்கியிருக்கிறது.

அப்படியான பொய்களின் மீது கட்டமைக்கப்படும் கதை, திரைக்கதை மற்றும் திரைமொழி காட்சியை காணும் பார்வையாளன், இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று முழுமையாக நம்பக்கூட தேவையில்லை. இப்படி நடந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தாலே அந்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றிதான், அப்படியான இப்படி நடந்தால் எப்படியிருக்கும் என்பதை பார்வையாளனுக்கு மிகச்சிறப்பாய் கடத்தி, அப்படி நடக்கும் விஷயங்களின் மீதான நம்பத்தமையையும் மிக சிறப்பாகவே கட்டமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி, துல்கர் சல்மானுக்கு 25வது படமாக சிறப்பான தரமான சம்பவம்.

பெரும்பாலான திரைப்படங்களின், சொல்லப்படும் கதையின் பிரதானமான கதாபாத்திரங்கள் அவர்களின் குடும்பப்பின்னனி, அந்த கதாபாத்திரத்தின் தன்மையென எல்லாவற்றையும் மிகச்சரியாய் பார்வையாளனுக்கு கடத்திவிட்டு, அதன்பின் தான் கதையின் முக்கியமான பகுதிக்கே வருவார்கள், மிகசில திரைப்படங்களில் தான், மேலே சொன்ன விஷயங்களை தவிர்த்து, நேராக கதைக்குள் போய், பின்னர் வேவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒவ்வோரு கதாபாத்திரங்களின் தன்மையும், ஒவ்வொன்றாக வெளிப்படும்படியான திரைக்கதையோட்டத்தை அமைத்திருப்பார்கள்.

இரண்டாவது வகை திரைக்கதை பாணியில் வெளிவரும் திரைப்படங்கள் மிகக் குறைவு, காரணம் இரண்டாவது பாணியில் திரையில் விரியும் கதையில் கொஞ்சம் பிசக்கினாலும் பார்வையாளன் தான் பார்க்கும் திரைப்படத்திலிருந்து விலகிவிடுவான், பின்னர் அவனை திரைக்குள் இழுப்பது மிக மிக கடினம், ஆனால் இவ்வளவு சவாலான விஷயத்தை தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே மிகச்சிறப்பாய் கையாண்டிருக்கிறார் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, அவருக்கு மிகப்பெரும் பூங்கொத்து, அதுவும் போக தற்பொழுதைய சுழலில் வெளிவரும் திரைப்படங்கள் பெரும்பாலானவற்றில் ஏன் 99 சதவீதம் திரைப்படங்களில் பிரதான பெண் கதாபாத்தின் முக்கியத்துவம் என்பது கடுகளவு தான் இருக்கும், எழுத்தில் மட்டுமே பிரதான என்ற வார்த்தை இருக்கும், ஆனால் திரையில் பெண் கதாபாத்திரத்தின் நிலை ஊறுகாய் அளவுக்குத்தான்.

இயக்குநர் தேசிங்கு பெரியசாமி அதிலும் வேறுபடுகிறார், திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் இரண்டு பெண் கதாபாத்திரத்திற்க்கும் எழுத்தில் மட்டுமல்லாமல் திரையிலும் பிரதானமான இடத்தை கொடுத்து அழகு பார்த்திருக்கிறார், சிலவகையான திரைக்கதைகள் மட்டுமே, அடுத்து என்ன, அடுத்து என்ன என்று படம் பார்வையாளனிடம் நானா நீயா என்ற விளையாட்டை விளையாண்டபடியே பயணிக்கும், கண்ணும் கண்ணும் கொள்ளயடித்தால் அப்படியான ஒரு திரைப்படம், பெரும்பாலும் பார்வையாளன் தன்னுடைய புத்திசாலித்தனத்தால் எதை எல்லாம் யோசிப்பானோ அதனை தவிர்த்து அவனுக்கு சின்ன சின்ன ஆச்சர்யங்களை கொடுத்தபடி பயணிப்பது தான் இதன் திரைக்கதையின் சிறப்பே, அதுவும் முதல்பாதி முடிவில் வரும் அந்த திருப்பம் அட்டகாசம்.

அதன்பின் கதை எப்படி நகரப்போகிறது என்பதை பெரும்பாலும் ஊக்கிக்க முடியவில்லை, இரண்டாம் பாதி, முதல் பாதியில் முடிந்த திருப்பத்தின் சுவாராஸ்யத்தை தக்கவைக்கும் அதே சமயத்தில், நம்மை பெரும்பாலும் இருக்கையின் நுனியில் அமரவைத்தபடி பல்வேறு ஆச்சர்யங்களை கொடுத்து மிக மிக சிறப்பான அட்டகாசமான சம்பவத்தோடு முடிகிறது. தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே பல்வேறு சுவாரஸ்யமான ஆச்சர்யங்களை திரையில் கொடுத்திருக்கும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியின் அடுத்த ஆச்சர்யத்தை காண ஆவலாய் காத்திருக்கிறேன், மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு :9171925916

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai AppMob: 9566531237, 8754055377Email: hellomadurai777@gmail.com

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat