ஆன்மீகம்இந்துகட்டுரைகள்மதுரை

கனவில் வந்து காட்சி தந்த ஆஸ்டின்பட்டி அம்மன்

மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லும் வழியில் ஆஸ்டின்பட்டி எனும் பழமையான சிறு கிராமம் உள்ளது. 1960ம் ஆண்டு இங்கு காசநோய் அரசு மருத்துவமனையினை அப்போதைய முதல்வர் காமராஜர் திறந்து வைத்தார். இங்கு மனிதர்கள் நடமாட்டம், மின்விளக்கு வெளிச்சம் இல்லாது புதர் மண்டிக் கிடந்தததால் அப்பகுதி மக்கள் இதனை காட்டாஸ்பத்திரி என்று அழைப்பதும் உண்டு.. அன்றைய காலகட்டத்தில் காசநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அந்நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கவும் ஒதுக்குப்புறமாக அமைக்கப்பட்டதே இம்மருத்துவமனை. இதற்கும் அம்மனுக்கும் என்ன தொடர்பு என்பது தானே உங்கள்… ?

மதுரை அருகில் பல்வேறு சிறு சிறு பகுதிகளில் மக்கள் குடியிருந்தனர். இன்றைக்கு பெரு நகரமாக மாறியிருப்பதால் அன்றைய நிலையை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படித்தான் ஆஸ்டின்பட்டியும். இந்தப் பழமையான கிராமத்தில் நோயை குணமாக்க வேண்டி 1950ம் ஆண்டில் தோன்றிய சக்தி மாரியம்மன்தான் இன்றைக்கு நாங்கள் புதுப்பித்துவைத்துள்ள சக்தி அம்மன் என்று நம்மிடம் கூறினார் முத்துராக் (வயது 52).

மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், எனது சொந்த ஊர் ஆஸ்டின்பட்டி. அம்மா நல்லுத்தாய் (72), அப்பா அழகர், இரு தங்கை, இரு தம்பி என விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நான் சிறு குழந்தையாக இருக்கும்போது இந்த அம்மன் பெங்களுருலிருந்து சுதை சிற்பமாக கொண்டுவரப்பட்டு வேப்ப மரத்தின் அடியில் வைக்கப்பட்டதாக என் தந்தையார் கூறுவார். அப்பொழுது எனது குடும்பத்துடன் இங்கு வந்து அம்மனை வழிபடுவது வழக்கம். அதன் பின் பல்வேறு காரணங்களால் இந்த வழிபாடு முற்றிலும் வழக்கொழிந்து சுமார் 40 ஆண்டுகள் திருவிழா இன்றி சிலையும் சிதலமடைந்துவிட்டது.

இங்கிருந்தவர்கள் பலரும் இடம்பெயர்ந்து மதுரையைச் சுற்றிலும் வசித்து வருகின்றனர். நான் எனது கணவர் முரளியை திருணம் செய்து சென்னை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராக பணியாற்றிய நிலையில், எனக்கு அடிக்கடி அம்மன் கனவில் காட்சியாக தென்பட ஆரம்பித்தது. முதலில் இதை சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டேன். பின்பு எனது அம்மா கனவிலும் வந்து தன்னை மீண்டும் நிறுவி ஆலயம் அமைத்து வழிபட கேட்டுக் கொண்டதன் பேரில் 07.04.16 அன்று ரூ.25,000 செலவில் எங்களுடைய சொந்த இடத்தில் சிறு கோவில் எழுப்பி கும்பாபிசேகம் நடத்தினோம்.

இந்த அம்மன் மதுரை மீனாட்சி அம்மனின் அம்சமாகும். திருமங்கலம் கோவிலில் எந்திரத்தினை 40 நாட்கள் வைத்து சிறப்பு பூஜை செய்து சங்கரநாராயண பட்டரால் அன்றைய தினம் இச்சிலை பிரதிட்சை செய்யப்பட்டது. ஆலயம் நிறுவி ஓராண்டு முடிவடைந்ததை கொண்டாடும் வகையில் கடந்த 07.04.17 அன்று முதலாம் ஆண்டு விழா நடத்தினோம். அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்கி இவ்வூர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அதிகாலை 3 மணி அளவில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு முளைப்பாரி, அக்னிசட்டி எடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை செய்யப்பட்டு, மாட்டுவண்டியில் ஆஸ்ட்டின் பட்டி முழுவதும் அம்மன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

இதனிடையே அம்மன் வீற்றிருந்த பழைய இடத்தில் ஊஞ்சல் அமைக்கப்பட்டு சிறிதுநேரம் அங்கே ஆடவிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இவ்விழாவிற்கு இங்கிருந்து சென்று மதுரையில் பல்வேறு பகுதியில் வசித்து வரும் நபர்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அன்றைய தினம் காலை, மாலை என பக்தர்களுக்கு அன்னதானம் பரிமாறப்பட்டது. இவ்விழாவிற்கு நன்கொடை வழங்கி உதவிய அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று மகிழ்வுடக் தெரிவித்தார் முத்துராக்.

40 அண்டுகளுக்கு பிறகு தாய், மகள் கனவில் வந்து தன்னை மீண்டும் ஆலயம் எழுப்பி அதில் அமர்த்தி வழிபட கூறியதன் அடிப்படையில் உருவாகியிருக்கும் சக்தி அம்மன் கோவில் ஓராண்டு விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் ஆஸ்டின்பட்டியின் அன்றைய பழைய நினைவுகளை நிச்சயம் மீட்டுக் கொடுத்திருக்கும். இன்று குழந்தை அம்மனாக வீற்றிக்கும் சக்தி அன்றை ஆஸ்டின்பட்டிக்கு குல தெய்வம் என்று தனது 72 வயதில் அனுதினமும் அம்மனுக்கு சேவை செய்து வருகிறார் முத்துராக் அம்மா நல்லுத்தாய். இந்த வழியாக நீங்கள் வந்தால் அம்மனை தரிச்சிக்கலாம்… அருள் பெறலாம்…

CALL : 9843534755, 9489339769

Spread the love

Reporter Ramesh

15 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைதுறையில் பணிபுரிந்து வருகின்றேன். சிறப்புக் கட்டுரைகள், சிறப்புச் செய்திகள் எழுத்து வடிவிலும், காணொலியாகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு. பத்திரிக்கைத்துறையில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகின்றேன். அந்த மாபெரும் கடலில் ஒரு இலையாகவே மிதந்து தொடர்ந்து மாணவனாக கற்று வருகின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலிக்கு நிருபராகவும், புகைப்படக்கலைஞராகவும் பணியாற்றுகின்றேன். அலைபேசி எண்: 9566531237.

Leave a Reply

Related Articles

Back to top button
error: Copy Right Hello Madurai !!
Close
Open chat