ஜூவல்லரிபெண்கள்

கால்களுக்கு வெள்ளிக் கொலுசு ஏன் ?

பெண்கள் கால்களில் குழந்தை வயதிலிருந்தே வெள்ளிக் கொலுசு அணிகிறார்கள். இது ஏன் என்று தெரியுமா ? ஏன் வெள்ளிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாகவே ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக காணப்படும். இதற்கு அவர்களது உடல்கூறு தான் காரணம். இதற்காக தான் சிறுவயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு கொலுசு அணிவிக்கப்படுகிறது.

வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை உறுதிப்படுத்தவும் கொலுசு பயன்படுகிறது.  கருப்பைக்கான முக்கிய நரம்புகள், கால் விரல்களிலேயே இருக்கிறது. இது கருப்பை நோய்களை கட்டுப்படுத்தும் திறன் பெற்றுள்ளது. இதன் காரணமாக தான் திருமணத்திற்கு பின்னர் மெட்டி அணிய வேண்டும் என பெண்களை அறிவுறுத்துகின்றனர்.

Show More

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

fifteen − three =

Close