கிச்சன் டிப்ஸ்

கிச்சன் டிப்ஸ்

புதினா இலைகளின் வாசனை என்றால் மூட்டைப் பூச்சிகளுக்கு ஆவதில்லை. அதனால் அவைகளை நீக்க இதனை பயன்படுத்தலாம். கொஞ்சம் புதினா இலைகளை எடுத்து, நீங்கள் தூங்கும் பகுதியில் வைத்துக் கொள்ளவும். குழந்தை தூங்கும் தொட்டிலிலும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாம். மூட்டைப்பூச்சிகள் விரட்டியாக இந்த புதினா இலைகள் செயல்படும். உங்களுக்கு தோதாக இருந்தால், உங்கள் சருமத்தின் மீதும் கொஞ்சம் இலைகளை தேய்த்துக் கொள்ளலாம்.

டூத் பேஸ்ட் டூத் பேஸ்ட் பற்களை மட்டும் வெண்மையாக்க உதவுவதில்லை, வெள்ளிப் பொருட்களையும் வெண்மையாக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு சிறிது வெள்ளையான டூத் பேஸ்ட்டை கையில் எடுத்து, வெள்ளிப் பொருட்களின் மீது தேய்த்தால், வெள்ளிப் பொருட்கள் மின்னும். சில காய்கறிகள் மிக்ஸியில் கறைகளை ஏற்படுத்திவிடும். அத்தகைய கறைகளை வினிகரை நீரில் கலந்து, மிக்ஸியில் ஊற்றி, 2 நொடிகள் அடித்து, பின் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். ஒருவேளை மிக்ஸியில் கறை அதிகம் இருந்தால், வினிகருடன் நீரை அளவாக ஊற்றி அடித்தால் மிக்ஸி பளிச் சென்று ஆகிவிடும்.

Show More

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

twelve + 7 =

Close