விவசாய கட்டுரைகள்விவசாயம்
Trending

குளவிகள் எப்படி கூடு கட்டும் ? இனப்பெருக்கம் செய்யும் ?

ஓநாய்த்தேனீ அல்லது ஓநாய்க்குளவி (Bee Wolf – Philanthus triangulum பொதுப்பெயர் Thread-waisted wasps) என்றழைக்கப்படும் இந்த வகையான குளவிகள், சிறிய வகை தேனீக்கள் மற்றும் பூச்சிகளை உணவாக வேட்டையாடி உட்கொள்ளுகிறது இவற்றின் பெண் இனங்கள், காணொளியில் உள்ளது போல் மண்ணிலே குழிதோண்டி தனது கூட்டை அமைத்துக் கொள்ளுகிறது.

குயவன் குளவி வகைகள் முட்டையிடும் காலம் வந்ததும் குளவியானது முதலில் தன் கூட்டுக்கான சரியான மண்ணைத் தேர்ந்தெடுத்து, சரியான ஈரபதத்தில் அப்படியே தனது வாயில் முடிந்தமட்டும் சேகரித்துக் கொண்டு வந்து பானைபோல குறுகிய கழுத்துப் பகுதியும், அகன்ற வயிற்றுப் பகுதியும், வளைந்த வாய்ப் பகுதியுமாக கூட்டை கட்டிமுடிக்கிறது. மண்ணில் ஈரப்பதம் குறைவாக இருந்தால் தன் வாயினாலே தண்ணீரை மொண்டு வந்து அதனுடன் தன் எச்சிலையும் சேர்த்து மண்ணை சரியான பதத்திற்கு கொண்டு வந்து கூடமைக்கிறது.

இப்படியாக இவை விதவிதமாக கூடமைப்பதே தம் முட்டைகளை இடவும் மேலும் தம் இளம் தலைமுறையின் பாதுகாப்புக்காகவும்தான். அடுத்த பிறக்கப்போகும் தன் குஞ்சுகளுக்காக உணவு சேமித்து வைக்க குறிப்பிட்ட வகைச்செடிகளைத்தேடி அலைகிறது. பின் தான் தேடிவந்த புழுக்கள், கரப்பான்பூச்சிகள், வெட்டுக்கிளி கிடைத்தவுடன் அப்படியே அவற்றை குளவி தன் விஷகொடுக்கால் கொட்டியுடன் இரையானது மயக்கநிலையில் இருக்கும், பின்னர் அவற்றை தூக்கியபடியே வானில் பறந்து தன் கூட்டிற்கு எடுத்துச்சென்று அந்த இரையின் மீது தங்களுடைய முட்டைகளை இடும். முட்டைகளில் இருந்து வெளிவரும் லார்வாக்கள் அப்புழுக்களையே உண்டு வளர்கின்றன.

குளவிகள் பூக்களில் உள்ள தேனை உண்டு வாழ்ந்தாலும் அவற்றின் லார்வாக்கள் பிழைப்பதற்கு புழுக்கள் தேவை. அந்த புழுக்கள் வாழ குறிப்பிட்ட வகை புதர்ச் செடிகளும் அந்த புழுக்களின் தாயான வண்ணத்துப் பூச்சிகளும் தேவை. குளவிகள் இல்லையென்றால் வண்ணத்துப் பூச்சிகளின் புழுக்கள் கட்டுப்பாடின்றி பெருகி தாம் சார்ந்திருக்கும் தாவரங்களை அழித்து தாமும் அழிந்துபோகும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் இன்னொன்று இல்லை.

குளவியினங்கள் வெட்டுக்கிளிகளைக்கொன்று அதன் உடலில் முட்டைகளை வைக்கின்றன. குளவியின் லார்வாக்கள் வெளிவந்ததும் வெட்டுக்கிளிகளை உண்டு வளர்கிறது. உயிருடன் உள்ள கரப்பான் பூச்சிகளின் முதுகிலும் முட்டைகளை வைக்கின்றன. முட்டைகள் பொரித்து குளவியின் புழுநிலை வடிவம் பெற்றதும், கரப்பான் பூச்சியை தின்று வளர்கிறது. இதுதான் இயற்கையில் குளவிகளின் உன்னதமான வலைப்பின்னல்.

குறிப்பு: உலகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளவி இனங்களில் சுமார் 9000 ரகங்கள், இன்றைய தனித்து வாழும் குணத்தையே கொண்டிருக்கின்றன. இவற்றிலும் கூட இரு கலாசாரங்கள் இருக்கின்றன. அதாவது பெரும்பாலானவை தம் கூடுகளை வித்தியாசமாகக் கட்டுகின்றன. மற்றும் சில கூடே கட்டாமல் ஒட்டுண்ணியாய் பிற குளவிகள் மற்றும் தேனீக்கள் கட்டும் கூடுகளில், ஒரு சாதகமான சூழலில் தம் முட்டைகளை இட்டு வைக்கின்றன.

Spread the love

மு.அசோக் குமார்

இயற்கை வழி விவசாயம் செய்து வருகிறோம், மாடித்தோட்டம், காய்கறித்தோட்டம் அமைத்துக் கொடுப்பது குறித்த பயிற்சி வகுப்புகள் எடுக்கிறோம். நாட்டுக்காய்கறி விதைகள் சேகரித்து பரவலாக்கம் செய்துவருகிறோம். சூழலியல், விவசாயம், மாற்றுக்கல்வி, மாற்று மருத்துவம் என நம்மாழ்வரின் கொள்கைகள் சார்ந்த புத்தகங்களை இயல்வாகை பதிப்பகம் பெயரில் பதிப்பிக்கிறோம். சூழலியல் குறித்த தேடல் உள்ள ஆர்வலர். 95001 25125.
Back to top button
error: Copy Right Hello Madurai !!
Close
Open chat