பியூட்டி

கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்ற எண்ணெய்கள்

கூந்தலை பராமரிக்கும் எண்ணெய்கள் இங்கு பல உண்டு. ஆனால் நாம் பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்துவோம். இது தவிர இன்னும் ஏராளமான எண்ணெய்கள் இங்கு உள்ளன. அவற்றைப் பற்றிதான் நாம் இங்கு பார்க்கப்போகின்றோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த எண்ணெய்களை பயன்படுத்தினால் நிச்சயம் பெண்களே உங்கள் கூந்தலுக்கு பலன் இருக்கு.

நெல்லிக்காய் எண்ணெய்:
நெல்லிக்காயில் முடியின் இயற்கை தன்மையை பாதுகாக்கும் சக்தி அதிகம் உள்ளது. அதிலும் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், அது ஒரு ஹேர் கண்டி¬னர் போன்று இருப்பதோடு, முடியின் கருமையையும் அதிரிக்கும்.

தேங்காய் எண்ணெய்:
இந்தியாவில் உள்ள பலர் முடிக்கு பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய் தான். இது முடிக்கு பொலிவைத் தருவதோடு, மயிர்க்கால்களை வலுவாக்கி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

பாதாம் எண்ணெய்:
பாதாம் எண்ணெயில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. அது அடர்த்தி குறைத்த எண்ணெய் தான். இதனை தினமும் பயன்படுத்தினால், முடியின் வளர்ச்சி அதிகமாக இருப்பதோடு, அடத்தியாகவும் இருக்கும்.

மருதாணி எண்ணெய்:
மருதாணி எண்ணெய் ஒரு நேச்சுரல் கண்டி¬னர் மற்றும் பொடுகுத் தொல்லையை நீக்கக்கூடியது. எனவே முடி நன்கு பட்டுப் போன்றும், பொலிவோடும், பொடுகுத் தொல்லையின்றியும் இருக்கும்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

14 + 13 =

Related Articles

Close