செய்திகள்மதுரை

கோவிட்-19 வார்டுக்கு புதிய டிஜிட்டல் மொபைல் எக்ஸ்ரே கருவி; சு.வெங்கடேசன் வழங்கல்

மதுரையில் தற்பொழுது கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனை கோவிட்-19 வார்டுக்கு மதுரை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்ச ருபாய் மதிப்பில் COMPUTER RADIOGRAPHY கருவியுடன் MOBILE X-RAY கருவிகளை மதுரை அரசு இராசாசி மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர்.ஆர்.ரவீந்திரன் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.சி.தர்மராஜ் அவர்களிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கினார். உடன் சிபிஎம் மாவட்ட செயலாளர்கள், இரா.விஜயராஜன் மற்றும் சி.ராமகிருஷ்ணன்.

நவீன தொழில்நுட்ப கருவியான இந்த டிஜிட்டல் எக்ஸ்ரே. மொபைல் எக்ஸ்ரே கருவியில் எடுத்த எக்ஸ்ரே படங்களை டிஜிட்டல் எக்ஸ்ரே படமாக மாற்றக்கூடியது. இதன்மூலம் கொரோனா சிகிச்சை பிரிவு நோயாளிகள் அந்தந்த பிரிவுகளில் வைத்தே டிஜிட்டல் எக்ஸ்ரே படம் எடுக்க முடியும். இதன்மூலம் நோயாளிகள் சிரமமின்றி சிகிச்சைபெற பேருதவியாக இருக்கும்.

Spread the love

நா.ரவிச்சந்திரன்- நிருபர்

முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினமணி பத்திரிக்கையில் 25 ஆண்டுகள் நிருபராக பணியாற்றியாற்றியுள்ளேன். அதனை தொடர்ந்து தினவணிகம் தினசரி நாளிதழ் பத்திரிக்கையில் கடந்த 11 ஆண்டுகள் நிருபராக பணியாற்றி வருகின்றேன். மதுரை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலியில் நிருபராக கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றேன்

Leave a Reply

Related Articles

Back to top button
error: Copy Right Hello Madurai !!
Close
Open chat