செய்திகள்மாநகராட்சி

சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளரிடம், அந்தந்த மண்டல அலுவலங்களில் உதவி ஆணையாளர்களிடம் நேரடியாக மனுக்களாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனர். மேலும் மாநகராட்சியின் அழைப்பு மையம், வாட்ஸ்அப், முகநூல் ஆகிய தகவல் தொழில்நுட்ப முறையிலும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாளை 25.02.2020 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை மண்டலம் எண்.4 அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் முகாம் ஆணையாளர் தலைமையில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய வரி விதித்தல், கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆணையாளர் ச.விசாகன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Show More

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

three × five =

Close