கட்டுரைகள்

செல்போனுக்கு மாற்றாக புதிய விளையாட்டு: மதுரை விளையாட்டு விஞ்ஞானி அப்துல் ரஹ்மான் சாதனை

இன்றைய குழந்தைகளிடம் விளையாட்டு என்பது மொபைலாக மட்டுமே உருமாறி உள்ளது. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு மொபைல் கேமில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூழ்கி கிடக்கின்றனர். மொபைல் கேம் குழந்தைகளின் மூளையை கடுமையாக பாதிக்கும் என்கினறனர் ஆராய்ச்சியாளர்கள். ஆனாலும் அதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றது.

வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் இந்நிலையில், விளையாட்டை அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் ஆக்கும் வகையில் ஒரு புதிய விளையாட்டைக் கண்டுடிபித்து அதில் சாதனை படைத்து வருகின்றார் மதுரையைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான். ந்த விளையாட்டிற்கு அவர் வைத்திருக்கும் பெயர் அசூய்டு. ‘அசூய்டு’ (ASUDE) என்றால் உலகத்தின் தினம் என்று பொருள். இது ஜப்பானிய மொழியிலிருந்து எடுக்கப்பட்ட சொல் ஆகும்.

குடும்பத்துடன் விளையாடும் இந்த விளையாட்டைக் கண்டுபிடித்த இவருக்கு `ஸ்போர்ட்ஸ் சயின்டிஸ்ட்’ என்ற பட்டத்தை திருநெல்வேலியிலுள்ள, மாவட்ட அறிவியல் மையம் அவருக்கு வழங்கியது. ஒரு துளி நீருக்காக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் போர்தான்தான் ‘அசூய்டு’ (ASUDE) என்ற விளையாட்டு. இந்த விளையாட்டுதான் உலகின் முதல் சமூக சிந்தனையுடைய விளையாட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த காலத்தில் விளையாடும் தாயக்கட்டைப் போலத்தான் இந்த விளையாட்டும் ஒரு அட்டையில் இருக்கும். இது அட்டை, பலகை என அவரவர் விருப்பங்களுக்கு ஏற்ப எதில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது, இந்த விளையாட்டுப் பலகையைச் சரிபாதியாக வகுத்துக்கொண்டு ஒரு பாதி மனிதர்கள் வாழும் பகுதியாகவும் மற்றொரு பாதி விலங்குகள் வாழும் பகுதியாகவும் பிரித்து காய்களை நகர்த்த வேண்டும்.

சதுரங்கத்தைப் போல் எதிரில் உள்ள காய்களை அடித்து வெளியேற்ற வேண்டிய அவசியம் இதில் இல்லை. சற்று சுவாரஸ்யமாக எதிரில் உள்ள காய்க்கு எச்சரிக்கை விடும் வகையில் இந்த விளையாட்டை வடிவமைத்துள்ளார். ஆடு புலி ஆட்டம் என்று இதை நீங்கள் நினைத்துவிட வேண்டாம். ஆடிப் பார்த்தால் இந்த விளையாட்டின் ஆர்வம் அதிகம் ஏற்படும் என்கின்றனர் இதை விளையாடியவர்கள்.

இந்த புதிய விளையாட்டு குறித்து அப்துல் ரஹ்மான் கூறுகையில், இன்றைய குழந்தைகள் செல் போனுக்குள் தங்கள் வாழ்க்கையை வாழ பழகியிருப்பது வருத்தமான ஒன்றுதான். அதிலும் செல் போனில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் புதிய புதிய கேம்களில் தங்ளது பெரும்பாலான நேரத்தை செலவிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு என்ன பயன் ? என்ற கேள்விக்கு யவரிடமும் பதில் இல்லை. மாறாக உயிர் பிரியும் அளவிற்கு மோசமான விளைவுகளைச் சந்தித்துள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இதை கருத்தில் கொண்டு, இளம் தலைமு

றையினரின் அறிவுக்கு ஒரு பாலாமாக அமையும் வகையில் இந்த புதிய விளையாட்டை கண்டுபிடித்தேன். இந்த விளையாட்டு குழந்தைகளுக்கு மட்டுமல்ல, வனத்தை அதில் வாழும் வன உயிர்களே பாதுகாக்க மறந்த நமக்கும் இயற்கை குறித்த புரிந்துணர்வை ஏற்படுத்தும். பொழுதுபோக்குடன் சமூக அக்கறையும் கலந்துள்ள விளையாட்டாகும்.

இந்த விளையாட்டு அரசுப் பள்ளி முதல் தனியார் பள்ளி வரை இங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு கற்றுக் கொடுகின்றேன். அந்த மாணவ, மாணவிகள் என்னிடம் கேட்டும் கேள்வி… ‘இப்படியெல்லாம் நமக்கும் விலங்குகளுக்கும் உண்மையிலேயே சண்டை வருமா சார்’னு” ஆமாம் நம்மதான் சண்டை வராம இயற்கையைக் காப்பாத்தணும்னு சொல்லுவேன். நாளைய சமுதாயம் இயற்கையைக் காக்கும் சமுதாயமா அமைய இந்த விளையாட்டு சின்ன முன்னெடுப்பாக அமையும்.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு முன்பு பள்ளிகளுக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் இந்த விளையாட்டைக் கற்றுக்கொடுத்து, அதை ஒரு பிசினஸாக செய்துவந்தேன். அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாகக் கற்றுக்கொடுத்தேன். ஆனால், இப்போது கொரோனா வைரஸ் பாதிப்பினால், வீடு இல்லாதவர்கள், வெளியூரிலிருந்து இங்கு வந்து திரும்பிச்செல்ல இயலாதவர்கள், மனநலம் சரியில்லாதவர்கள் என அனைவருக்கும் பழங்காநத்தத்தில் ஒரு கேம்ப் அமைத்து மாவட்ட நிர்வாகம் அவர்களை தங்க வைத்துள்ளது. அவர்கள் மன அழுத்தத்தில் இருக்கலாம்.

எனவே, கேம்பில் வந்து இந்த விளையாட்டை சொல்லித்தருமாறு மாவட்ட நிர்வாகம் அழைத்தது, முதலில் தயக்கத்துடன்தான் சென்றேன். ஆனால், அவர்களுக்கு இந்த விளையாட்டைக் கற்றுக்கொடுத்த பின்பு, அவர்கள் ஆர்வத்துடன் கேட்டு விளையாடினர். இவர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு எதிர்பார்க்காத ஒன்றாகும். மேலும், இந்த விளையாட்டைச் சமூக இடைவெளியுடன் விளையாடலாம். நூறு பேர்கூட ஒரே நேரத்தில் விளையாடலாம்” என்று கூறி நம்மை மேலும் ஆச்சர்யப்படுத்தினார் அப்துல் ரஹ்மான்.

அவரின் இந்த விளையாட்டை, சிறப்புக் குழந்தைகளின் மன மேம்பாட்டிற்காக சிறப்புப் பள்ளியில் ஆய்வுக்குக் கேட்டுள்ளனர். ஆய்வு முடிந்தபின் அவர்களுக்கும் இந்த விளையாட்டு உதவலாம். பொழுதும் செல்போன் கேமில் முஙழ்கிக் கிடக்கும் அடுத்த தலைமுறைக்கு நாம் இதுபோன்ற சமூக அக்கறையான விளையாட்டை விளையாடச் செய்யலாம்.

இதன் மூலம் சமூக அக்கறையும், அதன் மீதான ஈர்ப்பும் எப்போதும் ஈரத்துடன் இருக்கும். இது போன்ற விளையாட்டுக்களை அரசும், பெற்றோர்களும் உக்கப்படுத்த வேண்டும். அடுத்த தலைமுறை இயற்கையின் தன்மைய உணர்ந்து அவற்றுடன் இனக்கமாக வாழ வேண்டும் என்பதே விளையாட்டு விஞ்ஞானி அப்துல் ரஹ்மானின் சின்ன சின்ன ஆசை… அது நிச்சயம் நிறைவேறும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் ஒருமித்த ஓசை.

இந்த விளையாட்டை செல்போனில் விளையாட முடியாது. செல்போனில் இருந்து குழந்தைகள் வெளியில் வர வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்த பிரத்யேக விளையாட்டு. ஆதலால் இந்த விளையாட்டடை நீங்களும் உங்கள் குழந்தைகளும் விளையாட வேண்டும் என்று நினைத்தால் உடனே அழைக்கவும் அப்துல் ரஹ்மானை. தொடர்பு கொள்ள: 8220089835.


அப்துல் ரஹ்மான்

எழுத்து: வித்யாசன்

Spread the love

Hello Madurai

Hello Madurai Website it's Local Content Update Site. Hello Madurai Owner Mr.M.Ramesh Kumar.   Another One Hello Madurai  App Google Play Store Available. This Site and App Content... News, Medical, Religions, Agri, Women, Extras… Hello Madurai Monthly Magazine Print Copy Releasing Date  01.03.2017.  It's Approved Central Government License. Running Three Year's Complete. Hello Madurai Amazing Magazine in Madurai. 52 Multi color Page. Unfortunately  Printing Stop (Corona Time) 01.04.2020. Now Going On Online  Service. It is likely to be a printing format again in the future. Soon the day for that. Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com Thanking You !!

Related Articles

Back to top button
error: Copy Right Hello Madurai !!
Close
Open chat