ஜூவல்லரிபெண்கள்

தங்கம், வெள்ளி நகைகள் வாங்கும் முன்

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து விண்ணைத் தொட்டாலும் நகைக் கடைகளில் தங்கம் வாங்கும் பெண்களின் கூட்டம் மட்டும் குறைந்தபாடில்லை அப்படி தங்கம், வெள்ளி வாங்கும் போது நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியவை. தங்கம் வாங்கும் போது பார்க்க வேண்டியவை  நகை வாங்கும் பொழுது எப்போதுமே அதன் நிறத்தையும், பளிச்சென்ற தன்மையையும் பார்த்து வாங்கக்கூடாது. ஏனென்றால் பாலிஷ் மூலம் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நிறம் கொடுக்கலாம்.

வேலைபாடுகள் குறைந்த நகைகçe வாங்குவதே சிறந்தது. செய்கூலி குறைவு என்பதை விட விற்கும் போது அதிக கழிவு ஏற்படாது.  தங்க நகை வாங்கும் போது பலர் பில் வாங்குவதில்லை. தேவையில்லாமல் எதற்கு பில் போட்டு விற்பனை வரி செலுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர். நகைகள் சரியில்லாமல் போனாலோ, பிற்காலத்தில் விற்க வேண்டும் என்றாலோ, பில்லால் பெரும் பலம் ஏற்படும். பில் வாங்கும் போது நகையின் எடை,மாடல், மாற்று போன்றவற்றைத் தெளிவாக குறிப்பிடச் சொல்ல வேண்டும்.

கற்கள், முத்துக்கள் பதித்த நகைகள் வாங்கும் போது, அதிக கவனம் காட்ட வேண்டும். சில கடைகளில் கற்களின் எடையையும் தங்கத்தின் எடை போல் பாவித்து விடுவார்கள். கற்களுக்கு தனி எடையையும், தங்கத்துக்குத் தனி எடையையும் காட்ட வேண்டும்.  பழக்கமுள்ள கடைகளிலேயே தங்கம் வாங்குவது சிறந்தது.அதனால் ஏமாற்றம் தவிர்க்கப்படும். பாதிப்பு ஏற்பட்டாலும் உடனே பரிகாரம் காணவும் முடியும்.

Show More

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

19 + eleven =

Close