காவல்துறைசெய்திகள்

திருப்பரங்குன்றம் : தைப்பூசத் திருவிழாவும் – காவல்துறையின் பாதுகாப்பும்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவிற்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகை புரிவதால் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் அவர்கள் தலைமையில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டு ஆங்காங்கே சீருடை அணியா காவல் துறையினரை பணியில் ஈடுபடுத்தியும், கண்காணிப்பு கோபுரம் மூலம் கண்காணித்தும், திருடர்களின் நடமாட்டத்தை சிசிடிவி மூலம் கண்காணித்தும், ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கியும், ‘May I help you’ பூத் மூலம் உதவிகள் புரிந்து வருகின்றனர். மேலும் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு எவ்வித இடர்பாடுகளுமின்றி வந்து செல்ல சாலைகளை தூய்மைப்படுத்தியும், இரவு நேரங்களில் நடந்து செல்வோருக்கு ஒளிரும் பட்டைகள் வழங்கி அவர்களது பாதுகாப்பை உறுதி செய்தனர். காவல்துறையின் இத்தகைய பாதுகாப்பினை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்

#TNPolice #Palani #Murugantemple #Tamilnadupolice #TruthAloneTriumphs

மதுரை மாநகர காவல் ஆணையர் விட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் நேற்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவை காண வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் பொதுமக்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யவதற்காவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுப்பதற்காகவும் 500 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டார்.
தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக முடிவடைந்தது. காவல்துறையை பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

15 − one =

Related Articles

Close