செய்திகள்மாவட்ட ஆட்சியர்

திருமங்கலம் ஊராட்சி கொக்குளம் கிராமத்தில் 71வதுகுடியரசுதினவிழா

மதுரைமாவட்டம், மதுரை திருமங்கலம்  ஊராட்சிஒன்றியம், ஆ.கொக்குளம் கிராமத்தில் 71வது குடியரசுதின விழாவினை முன்னிட்டு இன்று(26.01.2020) நடை பெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்டஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

இக்கிராமசபைக் கூட்டத்தில் தொழுநோய் தடுப்புவிழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பொதுமக்கள் மற்றும் அரசுஅலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தூய்மை காவலர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரியங்கா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்லதுரை, மாவட்டஆட்சியரின் அவர்களின் நேர்முகஉதவியாளர்(விவசாயம்) தனலெட்சுமி, கால்நடைபராமரிப்புத்துறை மண்டல இயக்குநர் சுரேஷ் கிரிஸ்டோபர்  திருமங்கலம் வட்டாட்சியர் தனலெட்சுமி, திருமங்கலம் வட்டாரவளர்ச்சிஅலுவலர்கள் உதயகுமார், சங்கர் கைலாசம் மாவட்ட ஊராட்சிக் குழுஉறுப்பினர் ஐயப்பன்,கொக்குளம் ஊராட்சி மன்றதலைவர் நர்மதா உள்ளிட்டஅரசு அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

1 × five =

Related Articles

Close