செய்திகள்மாநகராட்சி

தெப்ப திருவிழா ஏற்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம்

08.02.2020 அன்று நடைபெறவுள்ள தெப்ப திருவிழாவினை முன்னிட்டு மேற்படி திருவிழா ஏற்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (03.02.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில்: மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்:

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தெப்பத் திருவிழா 08.02.2020 அன்று நடைபெறவுள்ளது.08.02.2020 தெப்ப உற்வத்தன்று அதிகாலை புறப்பாடாகி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அருகில் உள்ள இத்திருக்கோயிலுக்கு சொந்தமான தெப்பக் குளத்தில் எழுந்தருளி காலை சுமார் 10.30 மணிக்கு இரண்டு முறையும், மாலை 6.30 மணிக்கு ஒருமுறையும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அனுப்பானடியைச் சேர்ந்த வடம் இழுக்கும் பக்தர்கள் குழுவினர் அடையாள அட்டையுடன் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நலன் கருதி குறிப்பிட்ட நேரத்தில் வருகை தந்து பாதுகாப்பாக வடம் இழுக்க வேண்டும். காவல்துறையினர் தேவையான கண்காணிப்பு மேடை, கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து இத்திருவிழாவிற்கான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு கருதி எச்சரிக்கை ஒலிப்பெருக்கி அமைப்பு தெப்பத்திலும், தெப்பக்குளத்தினை சுற்றிலும்ஏற்படுத்திட வேண்டும்.
போதுமான மின்சார வசதி மற்றும் மின்சாரம் தடையின்றி வழங்கிட ஏற்பாடு செய்தல் வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் மீட்பு படகுகள் மற்றும் மீட்பு வீரர்கள் தயார்நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் தகுந்த மருத்துவ உபகரணங்களுடன் தயார்நிலையில் இருக்கவும், சுகாதார வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் தற்காலிக நடமாடும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில்அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர்ஃசெயல் அலுவலர், மதுரை hநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

2 × one =

Related Articles

Close