மதுரை தெருக்கள்வீடியோ

இராய கோபுரத் தெரு – தெருப் பெயர்கள் 03345

இராயக் கோபுரத் தெரு

தெருக்கள் பற்றிய தொகுப்பில் ராய கோபுத் தெருவிற்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. ஏனெனில் இந்தக் கோபும் முற்றுபெறாமல் பாதியிலே நின்றததுVன். இந்தப் பணி மட்டும் முடிவு பெற்றிருந்தால் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய கோபும் இதுவாகத்தான் இருந்திருக்கும். சரி வாங்க, தெருவில் நடந்து கொண்டே ஏன் இக்கோபுரப் பணி பாதியிலேயே நின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.

மன்னர் திருமலைநாயக்கர் 1635இல் புது மண்டபம் கட்டி முடித்த பின்னர் ஆவணி மூலவீதியைக் கோயிலுடன் சேர்த்து அதை ஒரு பிரகாரமாக்கத் திட்டமிட்டார். இதனால் ஆவணி மூலவீதியைச் சுற்றி மதிலெடுக்க விரும்பி புதுமண்டபத்திற்கு எதிரில் இராயர் கோபுரத்தை 1654இல் கட்டத் தொடங்கினார். தமது எல்லைக்குட்பட்ட அதாவது ஊட்டத்தார் முதல் கன்னியாகுமரி வரை 64 இடங்களில் இது போன்ற இராயர் கோபுரங்களை ஒரே சமயத்தில் கட்டத் தொடங்கினார். ஆயினும் ஏதோ காரணத்தால் அனைத்து கோபுர வேலைகளுமே தடைபட்டு விட்டன. 1659இல் திருமலைநாயக்கரும் மரணமடைந்தார். இதனால் இப்பணி முழுவதும் நின்று போயிற்று.

மதுரையில் முற்றுப் பெறாத நிலையில் உள்ள இக்கோபுரம் இராயக்கோபுரம் என்றழைக்கப்படுகிறது. இக்கோபுரத்தின் முதல் தளமே மீனாட்சியம்மன் கோயிலின் மற்றைய கோபுரங்களில் உள்ள முதல் தளத்தை போன்று இரு மடங்கு உள்ளது. இக்கோபுரத்தின் அடிப்பகுதி முழுவதும் கல்லினால் ஆனது. இது நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டது. இங்கு அமைந்துள்ள பல்வேறு கடைகளால் இன்று இராயக்கோபுரத்தின் அழகையும் பெருமையையும் நம்மால் கண்டுகளிக்க முடியவில்லை என்பது என்னவோ உண்மைதான். அதேபோல் புதுமண்டப வாயிலுக்கும் இராய கோபுர வாசலுக்கும் நடுவில் அமைந்திருக்கும் நந்தி சிலை குறித்து விரிவாக வேறு பதிவில் பார்ப்போம்.

இக்கோபுரம் 174 அடி நீளமும் 107 அடி அகலமும், நுழைவாயில் 22 அடி அகலமும் கொண்டது. இக்கோபுரத்தின் அடித்தளம் மட்டும் 16.5 மீட்டர் உயரம்… அதாவது… ஏறத்தாழ 60 அடி உயரத்தில் இக்கோபுரம் அமைக்கப்பட இருந்ததுள்ளது. அனைத்துக் கோபுரங்களையும் விட உயரமான இராய கோபுரத்தைக் கட்ட திருமலைநாயக்கர் திட்டமிட்டிருந்தார். இக்கோபுரம் கட்டி முடிக்கப்பட்டு இருந்தால் மீனாட்சியம்மன் கோயிலின் முக்கிய நுழைவாயிலாக இது அமைந்திருக்கும். இந்தியாவிலேயே மிகச் சிறந்த கோபுரமாகவும் திகழ்ந்திருக்கும் மதுரையினுடைய நகரமைப்பும் பெரிதும் மாறியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் (1509‡1530) நினைவாக இக்கோபுரத்தை மன்னர் திருமலை நாயக்கர் கட்டத் தொடங்கினார் என்பர் சிலர், ஆயினும் இக்கருத்தைவிட விஜயநகரப் பேரரசின் மன்னர்கள் நினைவாக இக்கோபுரம் கட்டப்பட்டது என்பதே பொருத்தமாகும். விஜயநகரப் பேரரசரின் மன்னன் ராயர் என்றழைக்கப்பட்டதால் இராயக்கோபுரம் எனப் பெயர் பெற்றது. ஒரு சாரார் இராஜகோபுரம் என்பதே இராயர் கோபுரம் என பேச்சு வழக்கில் மாறிவிட்டது என்பர். இராயக் கோபுரத் தெரு, இராயக் கோபுர வடக்குத் சந்து, இராயக்கோபுர தெற்குத் சந்து என்பவைகள் இராயக் கோபுரம் பெயரால் ஏற்பட்டத் தெருப் பெயர்களாகும்.

—————————————-

Hello Madurai App
Hello Madurai Monthly Magazine
www.hellomadurai.in
E-mail: hellomadurai777@gmail.com

Spread the love

Hello Madurai

Hello Madurai Website it's Local Content Update Site. Hello Madurai Owner Mr.M.Ramesh Kumar.   Another One Hello Madurai  App Google Play Store Available. This Site and App Content... News, Medical, Religions, Agri, Women, Extras… Hello Madurai Monthly Magazine Print Copy Releasing Date  01.03.2017.  It's Approved Central Government License. Running Three Year's Complete. Hello Madurai Amazing Magazine in Madurai. 52 Multi color Page. Unfortunately  Printing Stop (Corona Time) 01.04.2020. Now Going On Online  Service. It is likely to be a printing format again in the future. Soon the day for that. Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com Thanking You !!

Related Articles

Back to top button
error: Copy Right Hello Madurai !!
Close
Open chat