செல்லப்பிராணிகள்

நாய் குட்டிகள் பிறந்தவுடன் என்ன செய்ய வேண்டும் ?

இந்த உலகில் ஒரு ஜீவன்  உதிப்பது என்பது அபூர்வமான ஒன்று. ஏனெனில் பிறப்பையும், இறப்பையும் எவராலும் நிகழ்த்த முடியாத ஒன்று. ஒவ்வொரு பிறப்பிலும் ஓராயிரம் அர்த்தங்களும், அதிசயங்களும் குவிந்துகிடக்கின்றன.

தாய்மை என்பது பெண்களுக்கு கிடைத்த பெருமையின் உச்சம். எல்லா ஜீவராசிகளுக்கும் தாய்மையின் சிறப்பை எளிதாக சொல்லிவிட முடியாது. தன் குட்டிகளையும், குஞ்சுகளையும் காய்ப்பாற்ற தன் உயிரையே கொடுக்கத் தயங்குவதில்லை. சரி விசயத்திற்கு வருகின்றேன்.

எந்த வயதில் எனக்குள் நாட்டின நாய்கள் வளர்ப்பு மீதான காதல் புகுந்தது என்பது எனக்கே அறியாத ஒன்று என்றபோதும், அதன் வளர்ப்பானது என்னை எங்கெங்கோ அழைத்துச் சென்று புதுப்புது நட்புகளை ஏற்படுத்தியுள்ளது. அப்படி நான் வளர்த்த நாட்டின நாய்கள் குட்டிபோடும்போது என்ன செய்வேன் என்பதை உங்களுக்கு கூறியுள்ளேன். இது நாட்டின நாய்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாய்கள் இனங்கள் குட்டிகளுக்கும் பொருந்தும். இதில் நிறை குறை இருக்கலாம். ஆயினும் அன்புடன் வாசியுங்கள்.

குட்டிகள் பிறந்தவுடன் அதன் மூக்கு மற்றும் வாய்ப் பகுதியில் உள்ள திரவத்தைத் தூய்மையான துணியினை வைத்து நன்றாகக் துடைக்க வேண்டும். ஏனேன்றால் நன்றாக மூச்சு விடுவதற்கு இது ஏதுவாக இருக்கும். அது தொடர்ந்து மூச்சு விடுவதற்காக நெஞ்சுப் பகுதியை மெதுவாகத் தேய்த்து விட வேண்டும்.

குட்டியின் வயிற்றின் அடிப்பகுதியில் உள்ள தொப்புள் கொடியை 3 செ.மீ. இடைவெளி தூரம் விட்டு வெட்ட வேண்டும். அவ்வாறு வெட்டும்போது அதிகமாக இரத்தப் போக்கு ஏற்பட்டால் அதைச் சுற்றித் தையல் போட வேண்டும்.

பிறந்த குட்டி சுறுசுறப்பாக இருக்கும்வரை வெதுவெதுப்பான தொட்டியில் வைக்க வேண்டும். குட்டி நன்றாக மூச்சு விட ஆரம்பித்த உடன் அதனை வெதுவெதுப்பான பெட்டியில் இருந்து மாற்றி வைக்க வேண்டும்.

பிறந்த குட்டியின் கண்கள் மூடிய நிலையில் இருக்கும். 10-14 நாட்களுக்குப் பிறகு குட்டி கண்களைத் திறக்கும். குட்டிகள் பால் குடிப்பதற்கு உதவி செய்ய வேண்டும். குட்டி பிறந்த சில நாட்கள் வரை 2-3 மணி நேரத்திற்கு ஒருமுறை பால் கொடுக்க வேண்டும்.

குட்டிகள் இறப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று உடலின் வெப்பநிலை குறைவாக இருப்பது. குட்டி பிறந்த சில நாள்கள் வரை 77 – 86 வரை வெப்பநிலை இருக்க வேண்டும். குட்டிகள் இருக்கும் தரையை வெதுவெதுப்பாக வைத்திருக்க வேண்டும்.

தொப்புள்கொடி உள்ள பகுதியை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

தினமும் குட்டியின் உடல் எடையைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் நன்றாக உள்ள குட்டிகளுக்கு 5-10 கிலோ வரை உடல் எடை அதிகரிக்க வேண்டும். உடலின் எடை குறைந்தால் குட்டிகளுக்கு நோய் உள்ளது என்று அர்த்தம்.

கண் மற்றும் மூக்குப் பகுதிகளில் இருந்து எந்தவிதமான திரவமும் வராமல் இருக்க வேண்டும்.

குட்டிகள் படுப்பதற்காகப் பயன்படுத்துகின்ற பொருள்கள் விலை மலிவாகவும், சுத்தம் செய்வதற்கு எளிமையாகவும் இருக்க வேண்டும். பயன்படுத்துகின்ற பொருள்களை அடிக்கடி மாற்ற வேண்டும்.

முதல் மூன்று வாரத்திற்குக் குட்டிகள் சிறுநீர் மற்றும் மலம் கழித்தால் தாய்நாய் குட்டியை நக்குவதன் மூலம் சுத்தம் செய்யும். மூன்று வாரத்திற்குப் பிறகு தாயின் உதவி இல்லாமல் சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும்.

எனக்குத் தெரிந்த சில தகவல்களை இங்கு பகிர்ந்துள்ளேன். இன்னும் குட்டிகளைப் பராமரிக்கும் முறைகள் உண்டு. அதனை அடுத்தடுத்த பதிவில் கூறுகின்றேன். எத்தனையோ கால்நடைகள் இருந்தும் ஏன் முதலில் நாய்குட்டிகள் பதிவு என்று கேட்பவர்களுக்கு, முதல் காரணம் நாட்டின நாய்களின் காதலன் என்பதும், எனது எழுத்து பயணம் துவக்கமானது பிறக்காக இருக்க வேண்டும் என்பதற்கே. அடுத்த பதிவில் வேறு ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கின்றேன்.

உங்களுக்கும் ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னிடம் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம். அந்த கேள்வி எனக்கும் விடையை தெளிவைக்கும்.

நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
இரா.கிஷோர்

Spread the love

இரா.கிஷோர்

வாயில்லா ஜீவன்கள் மீதான எனக்கிருக்கும் காதல் மொழிகள் அறியப்படாத பேரன்பாகும். ஜல்லிக்கட்டு காளை முதல் நாட்டு இன நாய்கள் வரை வளர்ப்பில் ஆர்வமுள்ளவன். நாட்டு இன நாய்களை காப்பாற்றுவதிலும், அதனை அழிவிலிருந்து மீட்கும் பணியில் என்னை உட்படுத்தியிருப்பது பேரானந்தம். வாசிப்பில் மட்டும் வாழ்ந்து வந்த நான், எழுத்துப் பயணத்தில் கால்தடம் பதிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். கால்நடைகள் குறித்த பல பயனுள்ள பதிவுகள் என்னிடமிருந்து பிறக்கும். அது பலருக்கும் நிச்சயம் பயக்கும்.
error: Copy Right Hello Madurai !!
Open chat