கவிதைபடைப்புகள்

நீ இல்லா இரவுகள்

இப்போதெல்லாம் இரவுகள் ஆழ்ந்து துயிலுகின்றன என் தாலாட்டுகளில்

நிலவு கூட யாருக்கும் காத்திருப்பது இல்லை விவாதிக்கிறது விண்மீனுடன்

நட்சத்திரங்களோ மின்னிக்கொண்டும் அவைகளூடே பின்னிக்கொண்டும்

நான் மட்டும் ஏனோ காத்திருக்கிறேன்
சற்று வியர்த்திருக்கிறேன்

தலையணை இலவமும் கனக்கிறது உன் கனவுகள் கண்ணீராய் கரைந்த படியால்

இமைகளும் சுமையாகின்றன
இரவெல்லாம் திறந்து களைத்திருக்கின்றன

நகராத நேரமும் அகலாத இருளும் வதைக்கின்றன

நீயில்லா பொழுதுகளை கழிப்பது கடின மானதென்ன

வெறுத்து விரட்ட மனமில்லாமல் இரவை நான் விட்டதென்ன

நான் வேண்டும் இரவாக நீ வேண்டும் இருளாக

உனைக்கண்டு கனவினிலே திளைத்திருக்க

விழிகளும் உன் உரு காணாது சோர்ந்திருக்க

என் செய்வேன் நான் இவையெல்லாம் எங்கு சென்று கழிப்பேன்

இப்படியோர் கொடுமிரவு இவ்வாறு எனக்கெதற்கு………..

Spread the love

இரஞ்சிதபிரியா.மு

கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை பொழுதுபோக்காக எழுதி வருகிறேன்

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat