கவிதைபடைப்புகள்

நீ நான் மழை

காலை விழிப்பதுவே உன் முகத்தில்

உணர்வெல்லாம் உரைத்திடுவேன் உன்னிடத்தில்

எப்போதும் கதகதப்பில் பருகிடுவேன்

அவ்வப்பொதுன் கோவத்தில் அதிர்ந்திடுவேன்

சிலநேரம் கொட்டிவிட்டு சிரித்துக்கொள்வாய்

அன்றொருநாள்….

அணைக்கத்தான் வந்தேன் சீறிக்கொண்டு சிந்திவிட்டாய் சிடுசிடுவென

உன் கோவம் பற்றிற்று ஏனோ எனை

அன்று முதல் பார்ப்பதையே மறுத்து விட்டேன்

பலர் அழைத்தும் தூரத்திலேயே விலகி விட்டேன்

இதோ இந்த மாலையிலே மழை சூழும் வேளையிலே

உனை நினைத்து ஏங்க வைத்தாய்

மணத்தால் எனை தூண்டிவிட்டாய்

பொறுத்தது போதும் இனியும் இயலா தேடி உனை அடைய வந்தேன்

உனை தூக்கி கோப்பையிலே ஊற்றி வைத்தேன் கோவமெல்லாம் போட்டுடைத்தேன்

இதழ் தீண்டி நடுநாக்கில் தித்திக்க
மழை கொஞ்சம் வா என்று தொட்டுக்க

இதமான பாடொன்றாய் ரசித்து வைத்தேன்

உன் கலப்பில் மயங்கித்தான் உறங்கிட்டேன்

காலையிலே பருகிடுவேன் பெட் காபி உருவினிலே……… !!

Spread the love
Show More

இரஞ்சிதபிரியா.மு

கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை பொழுதுபோக்காக எழுதி வருகிறேன்

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat