ஆரோக்கியம்மருத்துவம்

நூடுல்ஸ் நோ

நூடுல்ஸ் நார்ச்சத்துக்களும், புரோட்டீனும் குறைவு என்பதால், இது எடையைக் குறைக்க சிறந்த உணவுப் பொருள் அல்ல. அப்படியே சாப்பிட்டாலும், பசியை இன்னும் அதிகரித்து, உடல் பருமனுக்கு வழிவகுக்கும். வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறி வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறி ஆய்வில், வாரத்திற்கு 2 முறை இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிடுபவர்களுக்கு, இதை சாப்பிடாமல் இருப்பவர்களை விட வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறியின் அபாயம் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. மைதா நிறைந்தது மைதா நிறைந்தது மைதாவால் ஆனது தான் நூடுல்ஸ். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமானது.

ஏனெனில் இதில் சத்துக்கள் குறைவு மட்டுமின்றி, அதிகமாக பதப்படுத்தப்பட்டிருப்பதோடு, ஃப்ளேவர்களும் நிறைந்தது. கெட்ட கொழுப்புக்கள் கெட்ட கொழுப்புக்கள் நூடுல்ஸில் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அல்லது ட்ரான்ஸ் கொழுப்புக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் எடிபிள் வெஜிடேபிள் ஆயில், சர்க்கரை, சர்க்கரை சிரப், ப்ளேவர் மற்றும் இதர ஆரோக்கியத்தைப் பாழாக்கும் ஏஜென்ட்டுகள் அடங்கியுள்ளது. எம்.எஸ்.ஜி எம்.எஸ்.ஜி நூடுல்ஸில் எம்.எஸ்.ஜி என்னும் மோனோசோடியம் க்ளுட்டமேட் என்னும் அடிமையாக்கும் ப்ளேவர்கள் நிறைந்துள்ளது. இத்தகைய நூடுல்ஸை ஒருவர் உட்கொண்டால், அது உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், தலைவலி மற்றும் குமட்டல் போன்றவற்றை உண்டாக்கும்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

15 + 5 =

Related Articles

Close