காவல்துறைசெய்திகள்

நேர்மையான ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு

கடந்த 10.02.2020 அன்று மதுரை மாநகர் விராட்டிபத்து பென்னர் காலனியைச் சேர்ந்த ஒரு பெண்மணி ஆட்டோவில் விராட்டிபத்துவில் ஏறி காளவாசலில் இறங்கும்போது தனது கைப்பையை ஆட்டோவில் மறந்து வைத்துவிட்டு இறங்கியுள்ளார். அவர் இறங்கிய பிறகு தான் ஆட்டோ ஓட்டுநர் ஷேக்மீரான் என்பவருக்கு ஆட்டோவில் ஒரு கைப்பை இருப்பது தெரியவந்தது.

அந்த பெண்ணை பல மணி நேரம் அப்பகுதியில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் நேற்று கரிமேடு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சங்கர்கண்ணன் அவர்களிடம் ஆட்டோ ஓட்டுநர் கைப்பையை ஒப்படைத்துள்ளார். காவல் ஆய்வாளர் கைப்பையை வாங்கி பார்த்த போது அதில் 4 ½ பவுன் தங்க நகையும், ரூ.23500/- பணமும் இருந்ததை அறிந்தார். இன்று ஆட்டோ ஓட்டுநர் ஷேக்மீரான் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், முன்னிலையில் அந்த பெண்ணிடம் கைப்பையை ஒப்படைத்தார். காவல் ஆணையர் ஆட்டோ ஓட்டுநருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

fifteen − 2 =

Related Articles

Close