பெண்கள்மெடிக்கல்

பலவீனமான கூந்தல் பராமரிப்பு

பலவீனமான கூந்தலை உடையவர்கள் ஈர்த்தலையில் அல்லது எண்ணெய் பூசியவுடன் தலையை வாரக்கூடாது. இரசாயனக் கலவை கொண்ட ஷாம்புகளைவிட, இயற்கை மற்றும் ஆயுர்வேத முறைகளில் தயாரிக்கப்படும் சீயக்காய் அல்லது ஷாம்புகளை உபயோகியுங்கள். சீயக்காய் தூளை சாதம் வடித்த கஞ்சியுடன் கலந்து தேய்த்தால் வறட்சித் தன்மை இல்லாதிருக்கும்.

கூந்தலை சுத்தம் செய்யும்போது மயிர்க்கால்களையும் கவனம் கொண்டு விரல் நுனிகளால் சுத்தம் செய்ய வேண்டும். மாதத்திற்கு மூன்று முறையாவது எண்ணெய் மசாஜ் செய்வதால் பலவீனமான கூந்தல் பலமான கூந்தலாகும். தலையில் மசாஜ் செய்ய கேரட் சாறு மிகவும் நல்ல பலனைத்தரும். அதிக சூடுள்ள நீரில் குளிக்கக்கூடாது.

கூந்தலை டவலால் அடித்து காய வைக்கக்கூடாது. பலகீனமான கூந்தலில் வெடிப்பு ஏற்பட்டு, முடிகொட்டுதல் உண்டானால், தேங்காய்ப் பாலை தேய்த்து ஊறவைத்துக் குளித்தால் முடி கொட்டுதல் நீங்கும். பிரசவத்திற்குப் பின் பெண்களுக்கு முடிகொட்டுதல் உடல் பலவீனத்தாலேயே என்பதை உணர்ந்து, சத்தான ஆகாரங்களை உண்டு கூந்தல் பலவீனத்தை சரிபடுத்திக்கொள்ள வேண்டும்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

10 + 19 =

Related Articles

Close