யோகா

பிரசவத்திற்குப் பின் யோகா

பிரசவ காலத்தில் பெண்களுக்கு உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். மேலும் அவர்கள் உடல் தோற்றத்திலும் பல மாற்றங்கள் ஏற்படும். அவற்றைப்போக்கி, இயல்பான நல்ல தோற்றத்தைப் பெற யோகா உதவும். உடல் எடையை குறைக்க யோகா ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ஒரு சில யோகாசனங்கள், விரைவாகவும், எளிதாகவும் உடல் எடையை குறைக்க உதவுகின்றது.

பிரசவத்திற்கு பின் ஏற்படும் உடலின் தளர்ச்சியைப் போக்க யோகா உதவும். குறிப்பாக உடலில் சக்தி இல்லாமல் இருப்பது, மூட்டு வலி, அதிக சோர்வு போன்ற பிரச்சனைகளை தீர்க்க இது உதவும். நல்ல உடல் அமைப்பை பெற உதவும். ஆங்காங்கே உடலில் தோன்றி இருக்கும் தேவையற்ற சதைகளை அகற்றி, கொழுப்பைக் குறைத்து, நல்ல இளமையான தோற்றத்தைப் பெற உதவும்.

மனம் அமைதி பெரும். கர்ப்ப காலத்திலும், பிரசவ நேரத்திலும் பெண்கள் பல மன ரீதியான பிரச்சனைகளை சந்தித்து இருந்திருப்பார்கள். அவற்றை போக்கி, அமைதியான மற்றும் மகிழ்ச்சியான மன நிலையை பெற யோகா உதவுகின்றது.

Spread the love

kamali

ஹலோ மதுரை மாத இதழின் வடிவமைப்பாளராக செயல்படுகின்றேன். அத்துடன் பெண்களுக்கான அழகு குறிப்புகள் முதல் மருத்துவம் வரையிலாக தகவல்கள் மற்றும் கட்டுரைகள் எழுதுவது எனது பொழுதுபோக்கு. மேலும், சமையல் குறித்த எழுத்துகளும், காணொளிகளும் படைப்பாக செய்து வருகின்றேன். இது தவிர மதுரை குறித்த வரலாற்று தகவல்கள் மற்றும் ஆன்மீகம் குறித்தும் எழுதி வருகின்றேன்.
error: Copy Right Hello Madurai !!
Open chat