கார்

புதிய டிரைபர் ஏஎம்டி மாடலை அறிமுகம் செய்துள்ளது ரெனால்ட்

குறைந்த பட்ஜெட்டில் பந்தாவான கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக ரெனால்ட் ஷோரூம் பக்கம் போகலாம். கம்மியான பட்ஜெட்டில் கலக்கலான மாடல்களை இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் வல்லமை கொண்டது. சும்மா டிசைன் எல்லாம் அசத்தலா இருக்கும். அதேபோல் ஃபியூச்சரும் செமையா இருக்கும். சிங்கில் ( நான்கு பேர்) குடும்பத்துக்கு சூப்பர் கார்.

இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் டிரைபர் ஏஎம்டி (AMT) எனும் புதிய வேரியண்ட்மாடல் காரை சந்தையில் களமிறக்கி உள்ளது. இந்த கார் பார்ப்பதற்கு அப்படி ஒரு லுக். இந்த கார் ஆர்எக்ஸ்எல் (RXL), ஆர்எக்ஸ்டி (RXT) மற்றும் ஆர்எக்ஸ்இசட் (RXZ) என மூன்று வேரியண்ட்களில் (மாடல்களில்) விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த புதிய ஏஎம்டி மாடலில் டிரான்ஸ்மிசன் யூனிட் தவிர வேறு எந்த மாற்றமும் செய்யவில்லை. கூடுதலாக இந்த மாடலில் 1.0 லிட்டல் மூன்று சிலிண்டர் கொண்ட பிஎஸ்6 (PS ) ரக பெட்ரோல் என்ஜின் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் காரின் வேகம், மைலேஜ் என இரண்டுமே செமையா இருக்கும். ஏன்னா இதன் என்ஜின் 63 பிஹச்பி பவர், 91 என்எம் டார்க் செயல்திறன் கொண்டது.

விலை:
விலையை பொறுத்த மட்டில் நான் ஏற்கனவே சொன்னதுபோல், பட்ஜெட் வரிசையாகப் பார்த்தால் ரூ.4.66 லட்சத்திலிருந்து ரூ.7.22 லட்சம் வரை கிடைக்கின்றது. ஆனால் இந்த புதிய ரெனால்ட் டிரைபர் ஏஎம்டி (AMT) மாடல் துவக்க விலை ரூ.6.18 லட்சம் ( என்ஸ் ஷோரூம்). இதுவே டாப் எண்ட் மாடலான ரெனால்ட் டிரைபர் ஆர்எக்இசட் ஏஎம்டி (RXZ AMT) விலை ரூ.7.22 லட்சம். கூடுதலாக ஒரு தகவல் என்னவென்றால் இது மேனுவல் வெர்­னை விட ரூ.40,000 விலை அதிகம்.

என்ன உடனே இந்த கார் மாடலை பார்க்க வேண்டும் என்று ஆசையா இருக்கா ? அருகில் இருக்கும் ரெனால்ட் ஷோரூம்-க்கு போங்க. நேரடியாக பார்த்து ஒரு டிரைவிங் செய்து எப்படி இருக்கின்றது என்பதை பின் வந்து எனக்கு கமென்ட் பன்னுங்க. தொடர்ந்து பல புதிய, பழைய கார்கள் பற்றிய தகவல்களை உங்களுக்கு தர உள்ளேன். உங்களுக்கு என்னிடம் கார் குறித்து ஏதாவது சந்தேகம் இருந்தால் மறக்காமல் கேளுங்கள்.

Car Ganesh

கார், பைக் மீது நான் கொண்ட காதலினால் என் பெயரை கார் கணேஷ் என்று மாற்றிக் கொண்டவன். எவ்வளவு தூரமாக இருந்தாலும் சரி, அது என்ன பைக்காக இருந்தாலும் சரி, பெட்ரோல் இருந்தால் மட்டும் போதும், போய்க் கொண்டே இருப்பேன் சலிக்காது சாலைகளின் மீது.பைக்கே இப்படி என்றால் கார் எல்லாம் சொல்லவே வேண்டாம். டப்பா காராக இருந்தாலும் இந்த ராஜா கைய வச்சா அது ராங்கா போவதில்லை. அந்த பாட்டுத்தான். எல்லாவிதமான பைக்கிலும் சவாரி செய்து ஒரு வலம் வந்திருக்கும் நான் ஒரு சில கார்கள் மட்டும் கனவாகவே உள்ளது. இந்த பக்கத்தில் புதிய கார், பைக், மெக்கானிக், டிப்ஸ் என எல்லாமே உங்களுக்கு அள்ளித் தரப்போகின்றேன். நிறை இருந்தால் பாராட்டுங்கள், குறை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.இப்படிக்கு... உங்கள் கார் கணேஷ்
error: Copy Right Hello Madurai !!
Open chat