செய்திகள்போலீஸ்

பூட்டிய கடைகளை உடைத்து செல்போன் திருடிய இருவர் கைது

மதுரை மாநகரில் உள்ள பூட்டிய செல்போன் கடைகளை உடைத்து திருடிய
நபர்களை பிடிக்க குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் பழனிகுமார் தனிப்படையினரான காவல் உதவி ஆய்வாளர் அருண் தலைமையில் சுப்பிரமணியபுரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரியா ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் பெயர் கணேசன் மற்றும் பிரசாந்த் ஜாக்கி என தெரியவந்தது.

மேலும் இருவரிடமும் விசாரணை செய்ததில் மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் ஒன்பது திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 22 செல்போன்கள் இரண்டு லேப்டாப், மூன்று DVR, ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

Tags
Show More

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

17 + fourteen =

Close