கவிதைபடைப்புகள்

பூவிதழ் வார்த்தையிலே

உன் முதன்முதல் வருடலில் உள்ளம் பூரித்தேன்……

பூவிதழ் தீண்டலில் கன்னம் சிவந்தேன்…….

அடுத்ததடுத்த உன் செயல்களில் மயங்கித்தான் போனேன்…

கால்களை இறுக்கிய உன் அணைப்பில் விலகமுடிந்தாலும் அசையா சிலையானேன்…….

என் சேலை தலைப்பே நீ மறைந்து விளையாட்டுத்தான் நீளமாய் விடுவேன்…..

ஊரே அடிமை உன் புன்னகைக்கு நான் மட்டும் விதிவிலக்கா…..

ஏங்கித்தான் போகிறேன் உனது பார்வைக்காய்……

நீ அடிப்பது மட்டும் ஏனோ உறைப்பதே இல்லை ….

உன் கரம் பிடித்து நடக்க கால்கள் வலிப்பதில்லை…….

உன்னை சுமந்து செல்லத்தான் தவமே மேற்கொண்டேன்…..

வரமாய் வேண்டுகிறேன் உன் வார்த்தையை…….

எப்போது கூறப்போகிறாய்…..

அம்மா என்று………

Spread the love

இரஞ்சிதபிரியா.மு

கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை பொழுதுபோக்காக எழுதி வருகிறேன்

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat