இந்துவீடியோ

மகா சிவராத்திரி மகிமை

சிவனுக்கான ராத்திரியே சிவராத்திரி. அன்று நாம் அனைவரும் அவசியம் சிவனை வழிபட்டு
அருள் பெற வேண்டும்.கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான், லிங்க வடிவில் மகாலிங்கமாக இன்று தான் முதன் முதலில் தோன்றினார் என்று நாரத புராணம் சொல்கிறது. ஜோதிப்பிழம்பாக திகழ்ந்த சிவபெருமானின் அடியும், முடியும் காண முடியாமல் பிரம்மாவும், விஷ்ணுவும் திகைத்து நின்ற நாள்.

இரவு நடக்கும் 4 ஜாம பூஜைகளில் கலந்து கொள்வது மிக, மிக சிறப்பானது.இரவு மண்ணாலான அகல் விளக்கில் பஞ்சு திரியிட்டு நெய் தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. இரவு சிவனின் மகிமையை விளக்கும் கதைகளை, உங்களுக்குத் தெரிந்து இருந்தாலும் மீண்டும் ஒரு தடவை படிக்கலாம்.

வீட்டில் சிவராத்திரி பூஜை செய்பவர்கள் சிவனுக்கு, ஒவ்வொரு ஜாமத்துக்கும் உரிய மலர்களை
சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றை, ஈசன் படம் மீது போட்டு வழிபடலாம். இரவு முதல் ஜாம பூஜையை மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடத்தவும். இரண்டாம் ஜாம பூஜையை இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடத்தவும்.

மூன்றாம் ஜாம பூஜையை நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கி நாளை மறு நாள் அதிகாலை 3 மணி
வரை நடத்தவும் நான்காம் ஜாம பூஜையை நாளை மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தொடங்கி
அதிகாலை 6 மணிக்குள் முடிக்கவும்.

சிவராத்திரியன்று சிவாலயத்தை சுற்றி வரும் போது, சிவநாமங்களை உச்சரித்து கொண்டே செல்ல வேண்டும். மதுரையில் உள்ள இம்மையில் நன்மை தருவார் கோவிலில் மகாசிவராத்திரியன்று சிவநாமம்
சொல்லியபடி 108 தடவை பிரகாரத்தை வலம் வந்தால் தோஷங்கள் விலகும்.

சிவபெருமானை செண்பகம், தாழை ஆகிய இரு மலர்கள் தவிர மற்ற மலர்களால் அர்ச்சித்து
பூஜை செய்யலாம். சிவபெருமானுக்கு மஞ்சள் பொடி கலக்காத, முனை உடையாத ஸ்வேத அட்சதை
கொண்டு அர்ச்சித்து வழிபட்டால், எல்லா செல்வமும் கிடைக்கும்.

சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்யும் போது, வில்லவப் பழம் வைத்து ஆராதனை செய்தால்
நமது பூஜைக்கான முழு பலன்களும் கிடைக்கும். ஒரு தடவை பயன்படுத்திய வில்வ இலைகளை நன்கு கழுவிவிட்டு, மீண்டும், மீண்டும் ஐந்து தடவை சிவ பூஜைக்கு பயன்படுத்தலாம்.

பதினாறு பட்டைகளுடன் கூடிய லிங்கம் கோடஷலிங்கம் எனப்படும். இந்த லிங்கத்தை
சிவராத்திரியன்று வழிபட்டால் 16 வகை பேறுகளும் கிடைக்கும். மகாசிவராத்திரி விரதம் இருப்பதோடு, சிவாலயங்களுக்கு பொருள் உதவி செய்தால், நூறு ஏகாதசி விரதம் இருந்த பலன் கிடைக்கும். அதோடு சிவனருளும் சேர்ந்து வரும் என்று சிவாகமம் கூறுகிறது.

சிவராத்திரியன்று கண்விழத்து, விரத நெறிப்படி பூஜைகள் செய்தால் அழிவற்ற செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டு தோறும் மகாசிவராத்திரி பூஜையை முறைப்படி செய்து வருபவர்களுக்கு சிவலோக மோட்சம் கிடைக்கும்.


Hello Madurai Team
Cont: 9566531237, 8754055377.

Hello Madurai App
Hello Madurai Monthly Magazine
www.hellomadurai.in
E-mail: hellomadurai777@gmail.com

“https://www.youtube.com/results?search_query=hello+madurai”

Spread the love

Hello Madurai

Hello Madurai Website it's Local Content Update Site. Hello Madurai Owner Mr.M.Ramesh Kumar.   Another One Hello Madurai  App Google Play Store Available. This Site and App Content... News, Medical, Religions, Agri, Women, Extras… Hello Madurai Monthly Magazine Print Copy Releasing Date  01.03.2017.  It's Approved Central Government License. Running Three Year's Complete. Hello Madurai Amazing Magazine in Madurai. 52 Multi color Page. Unfortunately  Printing Stop (Corona Time) 01.04.2020. Now Going On Online  Service. It is likely to be a printing format again in the future. Soon the day for that. Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com Thanking You !!

Related Articles

Back to top button
error: Copy Right Hello Madurai !!
Close
Open chat