கட்டுரைகள்கல்வி கட்டுரைகள்செய்திகள்
Trending

மதுரையின் அடையாளம்… அமெரிக்கன் கல்லூரி…

எந்த ஊருக்கும் இல்லாத எல்லாப் பெருமையும் எங்கள் மதுரைக்கு மட்டும்தான் என்று பெருமையாகப் பேசும் மதுரையின் இன்னொரு மணிமகுடம் அமெரிக்கன் கல்லூரி. மெடிக்கல் காலேஜ், மீனாட்சி காலேஜ், வக்ஃப்ஃபோர்டு காலேஜ், லேடி டோக் காலேஜ், யாதவா காலேஜ், சட்டக்கல்லூரி இவற்றிற்கு மத்தியில் அமைந்துள்ள இக்கல்லூரியில் தற்போது பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 6,750. ஆசிரியர்கள் 270 பேர், இதர பணியாளர்கள் 130 பேர். வாங்க அமெரிக்கன் கல்லூரியை சுற்றிப் பார்போம்…

மதுரை அமெரிக்கன் கல்லூரி இந்தியாவிலுள்ள மிகப் பழமையான கல்லூரிகளில் ஒன்றாகும். இயற்கை எழில் கலந்த சிவப்புச் செங்கற்கட்டிடங்களால் ஆன இக்கல்லூரி சரசனிக் கட்டிடக் கலையின் (Saracenic Style) வடிவமைப்பைக் கொண்டது. கோதிக் வளைவுகள், குவிமாடங்கள் மற்றும் கண்ணாடியினால் எழுப்பப்பட்ட உயர்ந்த வாயிற்களைக் கொண்ட இக்கல்லூரி பிரிட்டிஷ் நாட்டின் கட்டிடக்கலை வல்லுநர் கென்ட்ரி இர்வினால் கட்டப்பட்டதாகும்.

கல்லூரியின் வரலாறு :
அமெரிக்க கமி­னால் 1841 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகிலுள்ள திருமங்கலத்தில் இறைப்பணியாகத் தொடங்கப்பட்ட அமெரிக்கன் கல்லூரியானது, 1881 ஆம் ஆண்டு அருட்திரு ஜார்ஜ் டி.வாஷ்பர்ன் என்பவரின் சீரிய முயற்சியினால் பசுமலைக் கல்லூரியாக உருவெடுத்தது. இவரே அமெரிக்கன் கல்லூரியின் முதலாவது முதல்வர் ஆவார். பின்னர் கல்லூரியின் 2வது முதல்வரான அருட்திரு டபிள்யூ. எம். ஜம்புரோ காலத்தில் 1904 ஆம் ஆண்டு தற்போதுள்ள இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இது 1913 ஆம் ஆண்டு முதல் தரக் (First Grade) கல்லூரியாக மாறியது.

இதில் கல்லூரிப் படிப்பிற்கு மாணவியர்கள் 1921 ஆம் ஆண்டு முதல் அனுமதிக்கப் பட்டனர். மதுரை அமெரிக்கன் கல்லூரியும் அமெரிக்காவிலுள்ள வாஷ்பர்ன் பல்கலைக் கழகமும் தங்களது இலச்சினையில் (Logo) புடமிடுதல் அழிப்பதற்கல்ல ஆக்குவதற்கே (Purificatus Non Consumptus) என்னும் ஒரே முகப்பு மேற்கோள் பொன் மொழி வாசகத்தை (Motto) கொண்டுள்ளன. திகவர்னிங் கவுன்சில் ஆஃப் திஅமெரிக்கன் காலேஜ் என்ற அமெரிக்கன் கல்லூரியின் ஆட்சிமன்றக்குழு, அமெரிக்கன் கல்லூரியை நிர்வகித்து வருகிறது. அமெரிக்காவில் இயங்கி வரும் அமெரிக்கன் கல்லூரி அறக் கட்டளை அமைப்பு அமெரிக்கன் கல்லூரியைக் கண்காணிக்கும் பொறுப்பில் இயங்கி வருகிறது.

மையமண்டபம்:
கல்லூரியின் பிரதானமான மைய மண்டபம் (Main Hall) இங்கிலாந்து கட்டிடக்கலை வல்லுநர் யஹன்றி இர்வினால் ரூ.52.000 மதிப்பில் கட்டப்பட்டதாகும். இவர் மைசூர் அரண்மனையை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிங்ஹாம்டன் கட்டிடம் :
பிங்ஹாம்டன் கட்டிடம் (Binghamton Hall) இயற்கை எழில் நிறைந்த கட்டுமான அழகியலோடு வில்லியம் ஜம்புரோ-வின் நினைவாக 1930 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அறிவியல் துறையின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் இது அமைந்தது.

ஜேம்ஸ் பெருமாட்டி கட்டிடம்:
நூற்றாண்டு பழமை வாய்ந்த வேதியியல் துறை மற்றும் இயற்பியல்துறை இரண்டிற்கும் தாயகமாக, உள்ளடக்கிய கட்டிடமாக ஜேம்ஸ் பெருமாட்டிகட்டிடம் அமைந்துள்ளது. இது எல்லன் எஸ்.ஜேம்ஸ் பெருமாட்டி (Lady Ellen S.James) மற்றும் இராபர்ட் கிறிஷோம் இருந்து (RobertChisholm) பெறப்பட்டநிதியுதவி மூலமாகக் கட்டப்பட்டதாகும். மதுரையில் நிறுவப்பட்ட அறிவியல் துறைகளுக்கான முதல் கட்டிடம் இதுவே ஆகும். நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி சர்.சி.வி.இராமனுடன் பணியாற்றிய சக விஞ்ஞானியான கே.எஸ்.கிருஷ்ணன் பெருமாட்டி ஜேம்ஸ் கட்டிடத்தில் அறிவியல் கல்வி பயின்ற முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேனியல் புவர் நினைவு நூலகம்:
DPM என்று சுருக்கமாக அழைக்கப் பெறும் டேனியல் புவர் நினைவு நூலகம் கல்லூரியின் மைய நூலகமாகும். தென்னிந்தியாவிலுள்ள பழமையான நூலகங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. 1816 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட அமெரிக்கன் சிலோன் இறைப்பணியைச் சார்ந்த பிரதான அருட்பணியாளர்களில் ஒருவரான அருட்திரு டேனியல் புவர் நினைவாக இந்நூலகம் கட்டப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் இந்திய இலக்கியம் மற்றும் மொழி பெயர்ப்பு ஆய்வு மையம் (SCILET):
முனைவர் அருட்திருபால் எல்.லவ் (Rev.Dr. Paul L. Love) என்பவரால் 1980களின் துவக்கத்தில் ஆங்கில மொழியில் அமைந்த இந்திய இலக்கியங்களின் முக்கியத்துவத்தை வெளிக்கொணரும் வகையில் இம்மையம் தொடங்கப்பட்டது. இம்மையம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற பிராந்திய மொழிகளில் அமைந்த இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதை ஊக்கப்படுத்துகிறது. அதன் மூலமாக ஆங்கில மொழி பெயர்ப்பு இலக்கியங்களை நாட்டிலுள்ள அனைத்து மாநிலத் தாரும் பயன்பெற வழி வகை செய்கிறது.

 
கல்லூரி முதல்வர் ம.தவமணி கிறிஸ்டோபர், கல்லூரி நிதிகாப்பாளர் கெவன் ரத்ன மேனிகா

இம்மையமானது சிறந்த இலக்கியப் படைப்பாளர்களை அறிமுகம் செய்வதோடு, கருத்தமர்வுகள், விரிவுரைகள், கவிதைவாசித்தல் போன்ற இலக்கிய நிகழ்வுகளை ஒழுங்கு செய்கிறது. அதன் மூலமாக ஆசிரியர்கள்,ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களுக்குப் படைப்பாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் சந்திப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், ஆங்கில மொழியிலான இந்திய இலக்கியத்திற்கு தனது பங்களிப்பாக பல வெளியீடுகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, காவ்ய பாரதி என்னும் வருடாந்திர கவிதைக்கான இதழை வெளியிடுகிறது. இவ்விதழ், பிரபலமான படைப்பாளர்களின் கவிதைகளையும் புதுமுகப் படைப்பாளர்களின் படைப்புகளையும் ஒன்றாகஅறிமுகம் செய்துவைக்கிறது.

அல்லியான்ஸ் ப்ரான்சே மதுரை:
அமெரிக்கன் கல்லூரியின் பிரெஞ்சு துறை தனது துணைக்கோள் பிரிவின் மூலம் பிரெஞ்சுமொழியை அடிப்படைநிலையில் கற்பவர்களுக்கும் சிறப்பு நிலையில் கற்பவர்களுக்கும் பிரெஞ்சு மொழிப் படிப்புகளை வழங்குகிறது. குறிப்பாக, மதுரைப் பிரிவில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் படிப்புகளான DELF மற்றும் DALF போன்ற பிரெஞ்சு மொழித் திறன் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.

புதிய துணை வளாகம்:
கிராமப்புற மாணவர்கள் மற்றும் சமுதாயத்திற்குப் பயன் தரும் வகையில் அமெரிக்கன் கல்லூரியின் புதிய துணைக்கோள் வளாகம் (New Satellite Campus) மதுரை-நத்தம் நெடுஞ்சாலையில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளாகமானது பி.பி.ஏமற்றும் எம்.பி.ஏபடிப்புகளை உள்ளடக்கிச் செயல்பட்டு வருகிறது. இங்கு வருங்காலத்தில் புதியதாக பல பட்டப்படிப்புகள் தொடங்கப்படுவதற்கான திட்டங்கள் உள்ளன.


அமெரிக்கன் கல்லூரியில் IQAC கருத்தரங்கு

கல்லூரி விடுதிகள்:
கல்லூரி வளாகத்தில் ஐந்து விடுதிகள் உள்ளன. இவற்றில் நான்கு விடுதிகள் மாணவர்களுக்காகவும் ஒரு விடுதி மாணவியர்களுக்காகவும் அமைந்துள்ளன. இதில் ஜி.டி.வாஷ்பர்ன் விடுதி இந்தியாவின் முதல் கல்லூரிவளாகவிடுதி இது. ஜி.டி.வாஷ்பர்னின் நினைவாகக் கட்டப்பட்டது. இவ்விடுதியின் கட்டுமானப் பணி 1908 ஆம் ஆண்டில் துவங்கி, 1909 ஆம் ஆண்டு விடுதியின் தரைத்தளமும் 1914 ஆம் ஆண்டு முதல் தளமும் கட்டப்பட்டு, கிழக்குப் பகுதியில் அமையப் பெற்ற விடுதியின் விரிவாக்கம் 1917ஆம் ஆண்டு நிறைவுற்றது.

இ.எம். பிளின்ட் முதல் விடுதிக் காப்பாளராக 1914ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். முதல் விடுதி நாள் விழா 19 பிப்ரவரி 1921 ல் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டு முன்னாள் பிரதமர் தி ஜார்ஜ் கிளேமென்சு கலந்து கொண்டார். தொடக்கத்தில் இது முதன்மை விடுதி என்றழைக்கப்பட்டது.


ஹாக்கிப் போட்டியில் வெற்றி

ஜம்புரோ விடுதி:
அருட் திரு வில்லியம் மைக்கேல் ஜம்புரோ-வின் நினைவாக இவ் விடுதி கட்டப்பட்டது. இதற்கு சென்னை மாகாணத்தின் சட்ட உறுப்பினர் மாண்பமைச்சர் சி.பி. இராமசாமி ஐயர் 5 செப்டம்பர் 1925 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். தொடக்கத்தில் பி.யு.சி மாணவர்களுக்கும் முது நிலை மாணவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட இவ்விடுதியில் இன்று சுயநிதிப் பிரிவைச் சேர்ந்த 110 இளநிலைப்பட்ட மாணவர்கள் தங்கிக் கல்வி பயில்கின்றனர்.

வாலஸ் விடுதி :
அமெரிக்காவிலுள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஓக்பார்க் ஆலய போதகர் டாக்டர் ஆல்பர்ட் பக்கர்கோ என்பவரால் இவ்விடுதிக்கு 21 ஐனவரி 1946ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

டட்லிவிடுதி:
டட்லிவிடுதி 17 பிப்ரவரி 1956ஆம் ஆண்டுஅடிக்கல் நாட்டப்பட்டு, 1957-1958 ஆம் கல்வியாண்டில் செயல்படத் தொடங்கியது. ஆரம்பத்தில் இது புதிய விடுதி என்றழைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு டட்லி விடுதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


அமெரிக்கன் கல்லூரி பணியாளர்கள்…

நாய்ஸ் கார்டன்:
1961ஆம் ஆண்டு 81 மாணவியர்க ளுக்காகத் தொடங்கப்பட்ட பெண்கள் விடுதியில் பின்னர் மாணவியர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்தது. அண்மையில் பெண்களின் உயர் கல்வி தேவைக்கு ஏற்றவாறு 18 அறைகள் கொண்ட புதியகட்டிடத்துடன் விரிவாக்கம் செய்யப்பட்டு நாய்ஸ் கார்டன் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

ஜீவன ஜோதி மையம்:
மாற்றுத் திறனாளிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய சுய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கு ஜீவன ஜோதி என்ற மையம் செயல்பட்டு வருகிறது. முன்னாள் இயற்பியல் பேராசிரியரும் அமெரிக்க மி­னரியுமான ரிச்சர்டுரீஷ் இந்த மையத்தினை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நோபல் பரிசு பெற்ற வங்கக் கவிஞர் இரவீந்தரநாத் தாகூர் போன்ற புகழ் பெற்ற அறிஞர்கள், சிறப்பு வாய்ந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், அரசியலாளர்கள் மற்றும் புகழ் பெற்ற ஆளுமைகள் பலரும் கல்லூரிக்கு வருகை புரிந்து சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளனர்.


அமெரிக்கன் கல்லூரி 1961-64 ஆண்டு மாணவர்கள்…

அமெரிக்கன் கல்லூரி இன்று:
1881 ஆம் ஆண்டுமுதல் 5 முதல்வர்கள் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த மி­னரிகள். 1977 ஆம் ஆண்டுபல்கலைக் கழக நிதிநல்கை குழுவினால் (UGC) தன்னாட்சி வழங்கப்பட்ட இந்திய அளவிலான முதல் ஏழு கல்லூரிகளில் மதுரை அமெரிக்கன் கல்லூரியும் ஒன்றாகும்.

இன்று 31 இளநிலைப் பட்டப்படிப்புகளையும் 16 முதுநிலைப் பட்டப்படிப்புகளையும் 8 ஆராய்ச்சி மையங்கள் மூலமாக ஆய்வியல் நிறைஞர் (M.Phil.,) மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளையும் (Ph.D.,) வழங்கிவருகிறது. தற்போதை முதல்வர் முனைவர் ம.தவமணி கிறிஸ்டோபர் அமெரிக்கன் கல்லூரியின் 17வது முதல்வராக 2011 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். NAAC தரப் பிரிவில் 4 மதிப்பெண்களுக்கு 3.46 மதிப்பெண் பெற்றுச் சிறந்து விளங்குகிறது.


அமெரிக்கன் கல்லூரி ஆசிரியர்கள்…

இக்கல்லூரியின் பழைய மாணவர் இன்று அலங்கநல்லூர் ஆசிரியர்:
ஒவ்வொருவருக்கும் கல்லூரி வாழ்க்கை என்பது என்றும் மறக்க முடியாத ஞாபகச் சின்னம்தான். தாங்கள் பயின்ற கல்லூரியை பின்னொரு நாள் சென்று பார்க்கும்போது ஏற்படும் உணர்வுகளை வெறும் வார்த்தைகளால் நிரப்பிவிட முடியாது. புன்னகை, கண்ணீர், கல்வி, காதல், பிரிவு, அனுபவம், வெற்றி, தோல்வி என எத்தனையோ நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கன் கல்லூரியில் பயின்ற, பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவருக்கும் சமர்ப்பணம் செய்கின்றோம்.

இக்கல்லூரியின் பழைய மாணவர் காட்வின் ராஜ்குமார் தனது அனுபவம் குறித்து ஹலோ மதுரையிடம் பகிர்ந்தது; அமெரிக்கன் கல்லூரியில் 1992-1995ம் ஆண்டு பி.ஏ.,பொருளாதாரம் பயின்றேன். என்னுடைய எண் 92 Eco 09. நான் கல்லூரி கூடைப்பந்து அணியில் மூன்றாண்டுகள் விளையாடினேன். முதலாம் ஆண்டு முடியும் நேரம் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. நான் கடைசி வரிசையில் அமர்ந்து ஒவ்வொரு நிகழ்ச்சியும் பார்த்து கொண்டு இருந்தேன். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அப்பொழுது என் மனதில் தோன்றியது அடுத்த வருடம் கல்லூரி ஆண்டு விழாவில் நான் பரிசு வாங்க வேண்டும் என்று நினைத்தேன். நினைத்தது நடந்ததா ஆம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பரிசுகள் வாங்கினேன். இது என் அமெரிக்கன் கல்லூரி வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவம். இன்று அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். என் மாணவர்கள் இப்பொழுது அமெரிக்கன் கல்லூரியில் படித்து கொண்டு இருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

அமெரிக்கன் கல்லூரியில் நுழையும் போது சாதாரண மாணவனாக இருப்பவர் கல்லூரி படிப்பு முடித்து வெளியே வரும்போது சாதனை படைத்த மாணவனாக வருவார் என்பது கூடுதல் தகவல். இக்கல்லூரியால் நான் பெருமை அடைந்தேன்! என்னால் இக் கல்லூரி பெருமை அடைந்தது.

முனைவர்.தா.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார்.

 

இக்கல்லுரியின் குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

பத்மபூ­ன் சர்.கரியமாணிக்கம் சீனிவாசகிருஷ்ணன் FRS, இராமன் விளைவின் துணைவிஞ்ஞானி.

பத்மஸ்ரீ கோவிந்தப்பா வெங்கிடசாமி நிறுவனர் அரவிந்த் கண் மருத்துவமனை.

பத்மபூ­ன் சிவநாடார், நிறுவனர் க்ஷிளீஸி டெக்னாலஜிஸ் தலைவர், ஸ்ரீசிவசுப்பிர மணிய

நாடார் பொறியியல் கல்லூரி மற்றும் சிவ நாடார் பல்கலைக் கழகம்.

பத்மஸ்ரீ தோட்டாதரணி, திரைப்படக் கலை இயக்குநர்.

கோமல் சுவாமிநாதன், நாடகாசிரியர், திரைப்பட இயக்குநர், இதழாளர்மற்றும் காங்கிரஸ் கட்சி செயற்பாட்டாளர்.

பாலா, தேசியவிருது பெற்ற திரைப்பட இயக்குநர்.

பத்மஸ்ரீ விவேக், திரைப்பட நடிகர்.

ஜெ.மகேந்திரன்,திரைப்பட இயக்குநர்.

கணபதிபாஸ்கரன், இயற்பியலாளர்.

அருட் தந்தை கீவாகிஸ் மார்டயோஷ் கோரோஸ், பேராயர், மலங்கரை ஆர்த்தடாக்ஸ் சிரியன் திருச்சபை.

பி.மோகன்,முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர்,மதுரை.

பழ.நெடுமாறன், தமிழ்த் தேசியத் தலைவர்.

ராம், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநர்.

ஏ.ஜி.எஸ்.ராம்பாபு, முன்னாள் மக்களவை உறுப்பினர், மதுரை.

நீதியரசர் வி.இராமசாமி, இந்திய உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி.

ராம்கி, திரைப்பட இயக்குநர்.

பேராசிரியர் ஜே.வசந்தன், ஓவியர், எழுத்தாளர் மற்றும் மதுரையில் ஆங்கில மேடை நாடகத்தின் தந்தை.

மேஜர் சுந்தரராஜன், திரைப்பட நடிகர்.

ஜேக்கப் சகாயகுமார் அருணி, சமையற்கலை வல்லுநர்.

கரு. பழனியப்பன்திரைப்பட இயக்குநர்.

சண்முகராஜன் நடிகர்.

மேஜர். ஸ்ரீராம்குமார் இந்திய இராணுவம்.

பழனிகுமணன், வால்ஸ்டீரிட் புலனாய்வு இதழாளர், 2015ஆம் ஆண்டு புலிட்சர் விருது பெற்றவர்.

கோபிசங்கர்,பாலினச் செயற்பாட்டாளர், மதுரை.

ஜஸ்டீன் பிரபாகரன், பின்னணி இசைக்கோர்ப்பு, மற்றும் இசையமைப்பாளர்.

அமெரிக்கன் கல்லூரி : 0452 – 2530070.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெளியீடு: ஹலோ மதுரை மாத இதழ்
ஆண்டு: 01.04.2017
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Reporter Ramesh

15 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைதுறையில் பணிபுரிந்து வருகின்றேன். சிறப்புக் கட்டுரைகள், சிறப்புச் செய்திகள் எழுத்து வடிவிலும், காணொலியாகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு. பத்திரிக்கைத்துறையில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகின்றேன். அந்த மாபெரும் கடலில் ஒரு இலையாகவே மிதந்து தொடர்ந்து மாணவனாக கற்று வருகின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலிக்கு நிருபராகவும், புகைப்படக்கலைஞராகவும் பணியாற்றுகின்றேன். அலைபேசி எண்: 9566531237.

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat