செய்திகள்போலீஸ்
Trending

மதுரையின் புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்கிறார் பிரேமானந்த் சின்ஹா: யார் இவர் ? என்ன செய்யப் போகிறார் ?

தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று அறிக்கை வெளியிட்டது. அதன்படி, சென்னை, மதுரை காவல் ஆணையர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர புதிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா மதுரை காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு முக்கிய உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை காவல் ஆணையராக பதவி வகிக்கும் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஏடிஜிபி, தொழில் நுட்பப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

டேவிட்சன் தேவாரம்:
மதுரை மாவட்டத்தின் காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் கடந்த 2017 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார். இவர் கடந்த இரண்டரை வருடங்களில் மதுரையில் குற்றச் செயல், சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளை வழக்கம்போல் அணுகாமல் மாறாக தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அதில், நகரில் குற்றங்களை தடுக்கும் வகையில் 100 வார்டுகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டு 50 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. போக்குவரத்து காவலர்களுக்கு டெல்டா என்ற சிறப்பு ரோந்து படையை உருவாக்கி, அதனை தனது கட்டுப்பாட்டில் வைத்து திறம்பட செயல்படுத்தினார். வார்டு பொதுமக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் முதல் முறையாக வார்டு எஸ்ஐக்களை நியமித்தார்.

யஹல்மெட் அணிதவதன் முக்கியத்துவம் குறித்து பல்வேறு புதிய நடைமுறைகளை பின்பற்றிகார். முக்கியமாக அபராதங்களுக்கு பதிலாக அறிவுரைகளை வழங்க அறிவுறுத்தினார். அதேபோல் கஞ்சாவை ஒழிக்கும் முயற்சியாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த சிறப்பு ஏற்பாடு செய்திருந்தார். அதேபோல் பெண்களின் பாதுகாப்பு கருதி காவலன் ஆப் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்ய பள்ளி, கல்லூரி உள்பட பல்வேறு இடங்களில் இச்செயலியின் விழிப்புணர்வு குறித்து எடுத்துரை காவலர்களுக்கு உத்தரவிட்டு அதிகளவில் செயலியை பதிவிறக்கம் செய்யவைத்தார்.

மதுரையில் போலியாக இயங்கிவந்த மசாஜ் கிளப் நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுத்தார். இதுபோன்ற பல்வேறு பாதுகாப்பு பணிகளை திறம்படச் செய்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். இருப்பினும் ஏடிஜிபி பொறுப்பில் மதுரையில் காவல் ஆணையராகவே தனது பணியை தொடர்ந்து வந்தார். இந்நிலையில் சென்னை மாநகராக காவல் தொழில்நுட்ப சேவை பிரிவின் கூடுதல் டிஜிபி ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மக்களுக்கு இதுவரை பணியாற்றிய ஆணையாளர் டேவிட்சன் அவர்களுக்கு ஹலோ மதுரை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

பிரேமானந்த் சின்ஹா:
இவர் சென்னை பெருநகர் தெற்கு சட்டம், ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருந்தார். 2001-ல் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார். சென்னை போதைப்பொருள் தடுப்பு, போக்குவரத்து பிரிவு, வடசென்னை இணை ஆணையர் உட்பட பல்வேறு இடங்களில் பணிபுரிந்து, மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மதுரையில் பெருகி வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு இவர் புதிய மாறறங்களை கொண்டு வருவார் என்றும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோல் போதை தடுப்பில் அதிக கவனம் எடுத்துக் கொள்வார் என்பதால் போதை கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. மதுரையில் புதிதாக ஆணையராக விரைவில் பொறுப்பேற்க உள்ள பிரேமானந்த் சின்ஹா அவர்களை ஹலோ மதுரை சார்பில் மனமார வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் கடந்த ஓராண்டுக்கு முன், மதுரை சரக டிஐஜி யாக நியமிக்கப்பட்ட ஆனிவிஜயா திருச்சி டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னை பூக்கடை பஜார் துணை ஆணையராக இருந்த ராஜேந்திரன் பதவி உயர்வு மூலம் மதுரை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் திடீரென 23 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம், 16 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளதன் பின்னடி நோக்கம் என்பது விரைவில் தெரியவரும். இனி பணி மாறறங்கள் மற்றும் பதவி உயர்வு குறித்து அரசு வெளியிட்டுள்ள ஆணையினை தெரிந்துகொள்வோம்.

பணியிட மாற்றமாகும் காவல் அதிகாரிகளின் பட்டியல்கள்:

  1. சென்னை காவல் ஆணையர் திரு.ஏ.கே,விஸ்வநாதன் செயலாக்கம் ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
  2. செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி திரு.மகேஷ்குமார் அகர்வால், சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. சீருடைப்பணியாளர் தேர்வாணைய டிஜிபி திரு.சுனில்குமார், மாநில மனித உரிமை ஆணைய டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
  4. மதுரை காவல் ஆணையராக பதவி வகிக்கும் திரு.டேவிட்சன் தேவாசிர்வாதம் ஏடிஜிபி, தொழில் நுட்பப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
  5. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி திரு.ரவி, சிறப்பு காவற்படை ஈரோடு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
  6. தலைமையிட ஐஜி திரு.ஜெயராம், மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  7. மத்திய மண்டல ஐஜி திரு.அமல்ராஜ், சென்னை தலைமையிட ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  8. சென்னை ஐஜி திரு.கணேசமூர்த்தி, பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  9. சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் திரு.தினகரன், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  10. சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் திரு.பிரேமானந்த் சின்ஹா, மதுரை காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
  11. சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் திரு.அருண், சென்னை சட்டம் ஒழுக்கு வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  12. திருப்பூர் காவல் ஆணையர் திரு.சஞ்சய்குமார், சென்னை தொழில் நுட்பப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  13. சென்னை செக்யூரிட்டி பிரிவு துணை ஆணையர் திரு.ராதாகிருஷ்ணன், விழுப்புரம் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  14. திருச்சி டிஐஜி திரு.பாலகிருஷ்ணன், மாற்றப்பட்டு சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
  15. சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் திருமதி.விஜயகுமாரி, கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
  16. சென்னை காவல் ஆணையரக தலைமையிட இணை ஆணையர் திரு.ஏ.ஜி.பாபு சென்னை தெற்குமண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
  17. சென்னை தெற்குமண்டல இணை ஆணையராக உள்ள திருமதி.மகேஷ்வரி, சென்னை காவல் ஆணையரக தலைமையிட இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
  18. சென்னை போக்குவரத்து தெற்கு மண்டல இணை ஆணையர் திரு.எழிலரசன், விழுப்புரம் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
  19. சென்னை ஆயுதப்படை டிஐஜி திரு.செந்தில்குமாரி, சென்னை தலைமையிட டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  20. மதுரை டிஐஜி திருமதி.ஆன்னி விஜயா, திருச்சி டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
  21. சென்னை டிஐஜி (நிர்வாகம்) திரு.நரேந்திரன் நாயர், கோவை டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
  22. ராமநாதபுரம் டிஐஜி திரு.ரூபேஷ்குமார் மீனா, தஞ்சை டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
  23. சமுதாய நுண்ணறிவு பிரிவு எஸ்பியாக இருக்கும் திருமதி.லட்சுமி, சென்னை (தெற்கு)போக்குவரத்து பிரிவு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவி உயர்வு பெறும் காவல் அதிகாரிகளின் பட்டியல்கள்:

  1. தஞ்சை டிஐஜிபியாக பதவி வகிக்கும் திரு.லோகநாதன், ஐஜியாக பதவி உயர்வு பெற்று, திருச்சி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. சென்னை வடக்கு இணை ஆணையர் திரு.கபில் குமர் சி சரத்கர், ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சிபிசிஐடி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டிஐஜி திரு.கண்ணன், ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. விழுப்புரம் டிஐஜியாக பதவி வகிக்கும் திரு.சந்தோஷ்குமார், ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை காவல் ஆணையரக நிர்வாக ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  5. காஞ்சிபுரம் டிஐஜி திருமதி.தேன்மொழி, ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  6. கோவை டிஐஜி திரு.கார்த்திகேயன், ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, திருப்பூர் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  7. திண்டுக்கல் டிஐஜி திரு.ஜோஷி நிர்மல்குமார், ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை விரிவாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  8. கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி திருமதி.புவனேஷ்வரி, ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை ஐஜி (பொது) நியமிக்கப்பட்டுள்ளார்.
  9. அயல்பணியில் இருக்கும் திரு.அபிஷேக் திக்‌ஷித், டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, டிஐஜியாக தொடர்கிறார்.
  10. சிபிசிஐடி குற்றப்பிரிவு-2 எஸ்பியாக இருக்கும் திருமதி.மல்லிகா, டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, சிபிசிஐடி குற்றப்பிரிவில் தொடர்கிறார்.
  11. காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி திருமதி.சாமூண்டீஸ்வரி, டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, காஞ்சிபுரம் சரக டிஐஜியாக தொடர்கிறார்.
  12. சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்பியாக இருக்கும் திருமதி.ராஜேஷ்வரி, டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை ஆயுதப்படை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  13. சீருடைப்பணியாளர் தேர்வாணைய எஸ்பி திரு.பாண்டியன், டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை ரயில்வே டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  14. பூக்கடை துணை ஆணையர் திரு.ராஜேந்திரன், டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, மதுரை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  15. அண்ணாநகர் துணை ஆணையர் திரு.முத்துசாமி, டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, திண்டுக்கல் டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
  16. சென்னை போக்குவரத்து (தெற்கு) துணை ஆணையர் திரு.மயில்வாகனன், டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, ராமநாதபுரம் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love

Hello Madurai

Hello Madurai Website it's Local Content Update Site. Hello Madurai Owner Mr.M.Ramesh Kumar.   Another One Hello Madurai  App Google Play Store Available. This Site and App Content... News, Medical, Religions, Agri, Women, Extras… Hello Madurai Monthly Magazine Print Copy Releasing Date  01.03.2017.  It's Approved Central Government License. Running Three Year's Complete. Hello Madurai Amazing Magazine in Madurai. 52 Multi color Page. Unfortunately  Printing Stop (Corona Time) 01.04.2020. Now Going On Online  Service. It is likely to be a printing format again in the future. Soon the day for that. Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com Thanking You !!

Leave a Reply

Related Articles

Back to top button
error: Copy Right Hello Madurai !!
Close
Open chat