செய்திகள்மதுரை

மதுரையில் குடியரசு தின விழா

மதுரை மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற (26.01.20) குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் டி.ஜீ.வினய் கலந்து கொண்டு தேசியகொடியை ஏற்றிவைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன்பின், நடைபெற்ற விழாவில் சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்.

இதனைத் தொடர்ந்து அனைத்துப் பிரிவிலும் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இறுதியாக அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இவ்விழாவை முன்னிட்டு ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

9 − one =

Related Articles

Close