செய்திகள்மாநகராட்சி

மதுரையில் கைகள் கழுவுவதற்கு வசதிகள் ஏற்படுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை

மதுரை மாநகராட்சி பகுதிகளில் கைகள் கழுவுவதற்கு வசதிகள் ஏற்படுத்தாத தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் ஆணையாளர் ச.விசாகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி மதுரை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை கடைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 62ன் கீழ் பொது சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு 76 ன்படி தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டு கொள்ளை நோய் சட்டம் 1897ன்படி வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி அரசு, தனியார் அலுவலகங்கள், மருத்துவ மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்குகள் ஆகிய இடங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் வருகை தரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான அளவு தண்ணீர் குழாய்கள் மற்றும் வாஷ்பேசின்களில் திரவ சோப்பு கரைசல் அல்லது கைகழுவும் சோப்பு வைக்கப்பட வேண்டும் என மாநகராட்சியின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு 169 மாநகராட்சி கட்டிடங்கள், 121 அரசு கட்டிடங்கள், 1035 தனியார் கட்டிடங்கள், என மொத்தம் 1325 இடங்களில் கைகள் கழுவுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

மேலும் இதுவரை கைகள் கழுவுவதற்கான வசதிகள் ஏற்படுத்தாத தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள் உடனடியாக தங்கள் நிறுவனத்தின் முன்புறம் கைகள் கழுவுதற்கான வசதிகளை ஏற்படுத்தி பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டிடத்திற்குள் நுழையும் முன்பும் வெளியில் செல்லும் முன்பும் கைகளை கழுவிய பிறகே அனுமதிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் மற்றும் கொள்ளை நோய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள் கைகள் கழுவுவதற்கு வசதிகள் ஏற்படுத்தி மதுரை மாநகராட்சியின் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு ஆணையாளர் ச.விசாகன். தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai AppMob: 9566531237, 8754055377Email: hellomadurai777@gmail.com

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat