மாநகராட்சி

மதுரையில் முகக்கவசம் அணியாத 149 நபர்களுக்கு ரூ.14,900 அபராதம் விதிப்பு

மதுரை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு பொதுமக்கள் பொது இடங்களுக்கு வரும்பொழுது முகக்கவசம் அணிந்து வருமாறும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே மதுரை மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் பணிபுரிறும் இடங்களுக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், அணியாவிட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஆணையாளர் ச.விசாகன் உத்தரவின்படி உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில் சுகாதார அலுவலர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பொது இடங்கள் மற்றும் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு முகக்கவசம் அணியாத மண்டலம் எண்.1க்கு உட்பட்ட பகுதிகளில் 24 நபர்களிடம் ரூ.2,400ம், மண்டலம் எண்.2க்கு உட்பட்ட பகுதிகளில் 29 நபர்களிடம் ரூ.2,900ம், மண்டலம் எண்.3க்கு உட்பட்ட பகுதிகளில் 48 நபர்களிடம் ரூ.4,800ம், மண்டலம் எண்.4 க்கு உட்பட்ட பகுதிகளில் 48 நபர்களிடம் ரூ.4,800ம் என மொத்தம் 149 நபர்களிடம் ரூ.14,900 அபராதம் விதிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த ஆறு நாட்களில் 1393 நபர்களிடம் ரூ.1,39,300 அபராதம் (26.05.2020) விதிக்கப்பட்டது.

எனவே பொதுமக்கள் வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணியுமாறும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்குமாறும் ஆணையாளர் ச.விசாகன்கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Spread the love

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat