மாநகராட்சி

மதுரை அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்: பொதுமக்களுக்கு இலவசமாக இயற்கை உரம்

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் ச.விசாகன், தலைமையில் இன்று (24.12.2019) நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது செவ்வாய்க்கிழமை குறைதீhக்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்று காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் குடிநீர், பாதாள சாக்கடை, வீட்டு வரி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சொத்து வரி பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 37 மனுக்கள் பொது மக்களிடமிருந்து ஆணையாளர் அவர்களால் நேரடியாக பெறப் பட்டது.

பெறப்பட்ட மனுக்கள் மீது ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். சென்ற குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சியின் ஒருங்கிணைந்த புகார் மையத்தின் மூலம் பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூறினார்.

மேலும் மனு கொடுக்கவந்த பொதுமக்களுக்கு மதுரை மாநகராட்சி வெள்ளைக்கல்லில் மட்கும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்தினை வீட்டுத் தோட்டங்களில் பயன்படுத்துவதற்காக தலா 2 கிலோ அளவிற்கு இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கினார்.

இம்முகாமில் துணை ஆணையாளர் வி.நாகஜோதி, உதவி ஆணையாளர் பழனிச்சாமி, செயற்பொறியாளர் (திட்டம்)ஐ.ரெங்கநாதன், செயற்பொறியாளர் முருகேச பாண்டியன், உதவி செயற்பொறியாளர் திரு.குழந்தைவேலு, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், உதவிப் பொறியாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

eleven − 4 =

Related Articles

Close