செய்திகள்மாநகராட்சி

மதுரை தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவது குறித்து இணைய வழியில் ஆலோசனை

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவ மனைகளில கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு முறையான சிகிச்சைகள் மேற்கொள்வது குறித்து கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் சென்னையில் இருந்து இணையவழி மூலம் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையில் ஆணையாளர் ச.விசாகன் முன்னிலையில் (28.06.2020) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெரிவித்ததாவது:

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள் கொரோனா காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு தனியாக புறநோயாளிகள் பகுதி அமைக்கப்பட்டு பரிசோதனை செய்து தனியாக சிகிச்சை வழங்க வேண்டும். கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக கூடுதலான படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொருவரும் தங்களது மருத்துவமனையின் முன்புறம் தனியாக வாஷ்பேசின், ஹேண்ட் சானிடைசர் வசதி தேவையான அளவு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். கிருமி நாசினி மருந்து தினந்தோறும் தொடர்ந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான அரசின் விதிமுறைகளை கடைப்பிடித்து சிகிச்சை வழங்க வேண்டும்.

காலதாமதமாக பரிந்துரை செய்வதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் கண்டறியப்பட்டவர்களின் விவரங்களை ஒவ்வொரு நாளும் தெரிவிக்க வேண்டும் அத்துடன் படுக்கை வசதிகளின் எண்ணிக்கையும், வசதிகளையும் தினந்தோறும் சிகிச்சைக்கு வருபவர்களின் விவரங்களையும் கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சிகிச்சைக்கு வரும் கொரோனா கண்டறியப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சை வழங்கி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றார்.

மேலும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு படுக்கை வசதிகள் பயன்பாட்டில் உள்ளது, கூடுதலாக எவ்வளவு படுக்கை வசதிகள் ஒதுக்கீடு செய்ய முடியும் என்பது குறித்தும், வாஷ்பேசின் வசதி, ஹேண்ட் சானிடேசன் வசதி மேற்கொள்ளப்பட்டது குறித்தும், காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு தனியாக புற நோயாளிகள் பகுதி அமைக்கப்பட்டது குறித்தும் ஆன்லைன் மூலம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுமார் 125 தனியார் மருத்துவமனைகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் வி.நாகஜோதி, துணை இயக்குநர் மீனாட்சி, உதவி நகர்நல அலுவலர் மரு.வினோத்ராஜா, உதவி ஆணையாளர் பிரேம்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், மருத்துவ கண்காணிப்பாளர் மரு.இஸ்மாயில் பாத்திமா, மருத்துவ அலுவலர் கோதை, கணினி திட்ட தொகுப்பாளர் ரவி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai AppMob: 9566531237, 8754055377Email: hellomadurai777@gmail.com

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat